பக்கம் எண் :

கோமகன் மீண்டும் தோன்றிய காதைபக்கம் : 139

வருந்திய துரைத்திட வாயொன் றீங்கிலை;
அடுக்கடுக் காகத் தொடுத்தெனைச் சார்ந்த 25
இடுக்கட் சுமையைப் பொறுத்துளேன் ஆயினும்
துடுக்கி என்மகள் துளிர்பூங் கொடியை
விடுக்கில ளாகி வெந்துயர்க் குழியில்
படுத்தினள் அந்தோ பாவி மடமகள்!
கருங்கல் இடறிய கால்விரல் ஒன்று 30
பெரும்புண் ணாகி வருந்துங் காலைக்
கொடுத்தேள் அதனிடைக் கொட்டிய தென்று
நெடுந்துயர் அடைவுழிக் கொடும்பட அரவம்
தீண்டிய தென்னத் தேங்கிய கவலைக்
கூண்டுடல் ஆகிக் குலைந்தேன் தோழி! 35

பூங்கொடியின் எழில் நலம்

ஆறாத் துயரால் அருண்மொழி துறந்தவண்
சேரா நின்றனள் சேர்கதில் லம்ம!
வாழ்வின் நலமெலாம் வகைவகை சுவைத்து
மூழ்கும் பருவத்து முதிரா இளமையள்,
அழகும் ஒளியும் அழியா ஓவியம், 40

பழகும் மொழியோ பழச்சுவை மானும்,
துளிர்த்தும் தளிர்த்தும் தூமலர் பூத்தும்
கிளைக்கும் மரந்தழீஇ மணக்கும் பூங்கொடி,
விழியின் மலர்ச்சியை வியந்துரை யாடஓர்

மொழியும் உளதோ? முகமொரு முழுநிலா, 45

 

நடைக்கும் இடைக்கும் நல்லதோர் உவமை
படைக்கும் ஆற்றல் பாவல புலவர்க்கும்
அரிதினும் அரிதே! ஆயிழை நீயும்
தெரிகுவை அந்தத் தெரிவையின் நலமெலாம்,
மூக்கும் விழியும் நோக்குநர் உளத்தைத் 50

---------------------------------------------------------------

துடுக்கி - துடுக்குக்காரி. மானும் - போலும், தீழீஇ - தழுவி, பாவல - பாடல்வல்ல, ஆயிழை - தேன்மொழி,