|
| தாக்கும் இயல்பின, தகதக ஒளியின, வார்த்தபொற் சிலைகொல்! வடியாச் சிலைகொல்! பார்த்தவர் இவ்வணம் மயங்குவர் பைந்தொடீ! | |
| | |
| பருவம் பாழ்படுவதா? | |
| | |
| சிறியவள் இல்லறச் செந்நெறிப் படாஅது | |
| பருவமும் உருவமும் பாழ்படப் புறநெறி | 55 |
| கருதின ளாகிக் கழிவது முறையோ? தேடருங் குறிஞ்சித் தேனினைப் பாழ்செயும் மூடரும் உளரோ? முக்கனி யாகிய தேமாங் கனியும், தீஞ்சுவைப் பலவும், | |
| கொழுங்குலை வாழைச் செழுங்கனி யதுவும் | 60 |
| அழுங்கல் எய்திட விழுந்து புழுதியில் நைந்து சிதைவதில் நன்மையும் உளதோ? ஐந்து பொறியிவள் அடக்கவும் வல்லளோ? | |
| | |
| கடப்பருங் காமம் | |
| | |
| இல்லறத் திருந்துநல் லின்பந் துய்த்தபின் | |
| நல்லஇவ் வுலகினை நஞ்சென வெறுத்துச் | 65 |
| செல்லும் துறவரும் சிற்சில போழ்து கொல்லும் காமங் கோட்பட் டுழன்றும் அல்லன புரிந்தும் அலைவுறல் கண்டோம்; ஒருநலம் உணரா துறைபவள் இவளை | |
| வருமிளம் பருவம் வருத்தா தொழியுமோ? | 70 |
| பழிக்கும் வினைகளை இழைக்கும் வழிகளில் நுழைத்திடும் அந்தோ! நுண்ணிடை மகளை; | |
| | |
| ஆசை கெடுத்தனள் | |
| | |
| குடிதழைத் திடவரூஉம் குலக்கொடி இவளென நெடிதுநினைந் திருந்தேன் கொடியவள் ஆயினள், | |
--------------------------------------------------------------- |
| படாஅது - சொல்லாமல், கோட்பட்டு - கொள்ளப்பெற்று, வரூஉம் - வரும். | |
| | |