|
| பரம்பரை அறுந்திடத் திறம்பினள் குழம்பினள், | 75 |
| நரம்பறும் யாழென நலிந்தனள் மெலிந்தனள்; | |
| | |
| வேட்புறுங் கோமகன் | |
| | |
| கற்றோர் மற்றோர் கணக்கிலாச் செல்வம் உற்றோர் இவள்மணம் ஒன்றே வேட்டுக் கடைவிழி நோக்கிக் காத்துக் கிடப்போர் | |
| படைஎனு மாறுளர்; பரிவுறும் அவருள் | 80 |
| செல்வமும் இளமையும் சேர்ந்தெழில் பொங்கும் நல்லவன் கலைபயில் வல்லவன் ஒருவன் கோமகன் என்னும் குறியுடை யானவன் பூங்கொடி நலமுண வீங்கிய வேட்கையன் | |
| தாங்கருங் காமம் ஓங்கின னாகி | 85 |
| உடலும் பொருளும் உயிரும் ஈயக் கடவன் அவனை மடவனென் றொதுக்கினள்; அப்பெருஞ் செல்வனை ஒப்பின ளாகித் தப்பருங் காதல் தடத்தினில் நீந்தித் | |
| துணையுடன் இருந்தே தொண்டுகள் ஆற்றின் | 90 |
| | |
| வஞ்சியின் வஞ்சினம் | |
| | |
| பிணைவிழி மாதின் பெறலரும் இளமை அணையிலாப் புனலென ஆகிட ஒவ்வேன்; இவள்நலம் விழையும் இளவல் கோமகன் | |
| தவள மாளிகை சார்ந்தவற் கொண்டு | 95 |
| குறளகம் நீக்கிக் கொணர்வேன் அவளை; பெருமகன் தன்பால் பேதையைப் படுத்தல் அறமெனக் கொண்டேன், அதுமுடித் தமைவேன்; படுத்தே னாயின் பாழுயிர்ச் சுமையை | |
| விடுத்தே அமைவேன் வெற்றுரை அன்'றெனத் | 100 |
--------------------------------------------------------------- |
| திறம்பினள் - மாறினள், உண - உண்ண, பிணை - பெண்மான், தவளம் - வெண்ணிறம். | |
| | |