பக்கம் எண் :

பக்கம் :142பூங்கொடி

 
  தொடுத்துரை கூறித் துணைவிழி சிவக்க
உயிர்ப்பும் செயிர்ப்பும் உற்றன ளாகிப்
பயனுடை நெடுந்தெரு பலவுடன் கடந்து
வியனுயர் மாளிகை விறலி கண்டனள்;
 
     
 

வஞ்சி கோமகனைச் சார்தல்

 
     
  வெண்சுதை பூசிய கண்கவர் மாமனைக் 105
  கண்புகுந் துள்மனைக் காட்சியை வியந்தனள்;
முன்னுள மலர்மணம் முகந்த தென்றல்
படர்தரு மெல்லிய பவர்நுனி யசைத்துச்
சுடர்விடு மாடச் சுவர்கடந் துட்புகச்
 
  செய்வினைச் சித்திரப் படாஅம் போர்த்த 110
  துய்யவெண் பஞ்சணைத் தூமலர்க் கட்டில்
இருந்தோன் திருந்தடி பொருந்திநிள் றேத்தினள்
 
     
 

கோமகன் பூங்கொடியின் நலம்வினவல்

 
     
  வந்தவண் ஏத்திய வஞ்சிக்கு வரவுரை
தந்து மகிழ்ந்து தான்பெரு களிப்பால்
 
 

நல்லெயி றிலங்க நகைத்தவன் `வஞ்சி!

115
  மெல்லியல் அருண்மொழி மேவிய நற்பணி
அல்லல் இன்றி ஆற்றுநள் கொல்லோ?
என்னுளம் இருளுறச் செய்தஅவ் விளங்கொடி
முன்னியபொதுப்பணி முட்டின் றோ'என,
 
     
 

வஞ்சியின் தூண்டுதல்

 
     
  `ஒருதனி ஓங்கிய திருவுடைப் பெரும! 120
  பெருகிய துயரால் பேதுறத் தினளுனை
என்னையும் மயக்குறுத் திடக்கடல் வீழ்த்தினள்;
நின்னையும் நின்மனம் நிறைந்துள மின்னையும்
பின்னிய அன்பால் பிணைந்தவ ராக்கி
 
  வதுவைக் கோலம் கண்டுநான் வாழ்த்த 125

---------------------------------------------------------------

  பவர் - பின்னியகொடி, படாஅம் - துணி (விரிப்பு), எயிறு - பல்வரிசை, முட்டின்று - தடையில்லை, வதுவை - திருமணம்.