பக்கம் எண் :

கோமகன் மீண்டும் தோன்றிய காதைபக்கம் : 143

 

 
  முதுமைப் பருவத்து முறுகிய ஆவல்
கனவாய் வெறுமொரு நினைவாய்க் கழிவதோ?
இனைவுறும் என்மனம் மகிழ்வுறல் என்றுகொல்?
நம்பி நினக்கொரு நங்கையும் அவளே!
 
  நங்கை அவட்கொரு நம்பியும் நீயே! 130
  நீமுனைந் தெழுவையேல் நேரிழை நின்னுழைக்
காமுறல் திண்ணம் கடிதினில் விரைக
கடிமணம் கொண்டு படிமிசை வாழ்'கென;
 
     
 

கோமகன் நிகழ்ந்தன கூறல்

 
     
  இழுக்கல் நிலத்திடை இடர்ப்பட் டேகுவோன்  
  வழுக்கல் தவிர்க்க வாய்த்தகோல் இவளென 135
  வஞ்சிக் குரைப்போன், முகுந்தன் வாய்மொழி
தன்செவி கேட்டுத் தென்புலப் பொழிலுட்
பூங்கொடி காண்பான் போய்ப்புகுந் ததூஉம்,
தாங்கா வேட்கை தாங்கவோன் றன்னைக்
 
  கண்டு வெரீஇக் கற்றோர் பலர்தாம் 140
  மண்டும் படிப்பகம் மங்கைபுக் கதூஉம்,
மெல்லியல் அல்லியை மேவி விருப்பைச்
சொல்லி மணம்பெறத் துடித்துநின் றதூஉம்,
ஆங்கது கேட்ட அல்லி தெளிவுடன்
 
 

பூங்கொடி நிலையினைப் புகன்றிருந் ததூஉம்,

145
  மங்கையின் மாற்றம் மதித்திடல் இன்றி
அங்குள படிப்பகம் அதனும் புகுந்திட
விரையும் காலை விஞ்சிய அறிவினர்
நிறையிடம் அதுவென நினைத்தகன் றதூஉம்,

 
  அகன்றபின் அல்லியை அணுக, வெறுத்து அவள் 150
  புகன்றுபின் நல்லுரை புகட்டி நின்றதூஉம்,
துளக்குறு நெஞ்சம் துணையே யாக
 

---------------------------------------------------------------

  படிமிசை - நிலத்தின்மீது, காண்பான் - காண, வெரீஇ - அஞ்சி, மண்டும் - நிறையும், மாற்றம் - மறுமொழி.