|
| விளக்கிலா இருளில் வெய்துயிர்ப் புடனே புல்லிதழ் மென்மலர் பொதுளிய பஞ்சணை | |
| கல்லென வருத்தக் கண்படை பெறாஅது | 155 |
| பொழுதுபுலர் காறும் புரண்டிருந் ததூஉம், எழுகதிர்ச் செல்வன் எழில்முகம் காட்டத் தோமறு செல்வி தாமரைக் கண்ணி காமம் கெடுத்திடக் கழற்றுரை மொழிந்ததூஉம், | |
| எஞ்சா துரைத்தபின் `ஏழிசை வல்ல | 160 |
| வஞ்சீ! இன்னுமவ் வளரிளம் பூங்கொடி நெஞ்சுவிட் டகன்றிலள் நிலைத்தனள் ஆயினும் நெஞ்சு கொடுக்கிலள் நிலையாய் நின்றனள்; கொஞ்சும் கிளிமொழி கொடும்நினை வதனால் | |
| துஞ்சுவ தன்றித் துணைசெய் வோரை | 165 |
| இன்னும் காண்கிலேன்' என்றவன் இயம்ப; | |
| | |
| வஞ்சியின் ஆறுதல்மொழி | |
| | |
| `கொடுமொழி யிதனைக் கூறேல் பெரும! விடுதுயர்! இனியுன் வேட்கை நிறைவுறும் அஞ்சுதல் ஒழிமதி! ஆர்துணை என்றோர் | |
| வெஞ்சொல் மொழிந்தனை! வஞ்சிஎன் துணையால் | 170 |
| அழகிய பூங்கொடி ஆர்வம் தழைத்திடக் கொழுகொம் பென்றுனைத் தழுவிட வரூஉம்; காமம் ஒதுக்கிய கடவுளும் ஈங்கிலை ஏமம் அஃதே ஈண்டுயிர் தமக்கெலாம்; | |
| கடவுளும் மாந்தரும் கண்டுணர் காமம் | 175 |
| இன்றெனின் உலகும் உயிரும் இன்றாம்; அவளும் நீயும் அதன்வழிப் படாஅது தவிர்தல் ஒல்லுமோ? தலைவ ஒன்றுகேள்! | |
--------------------------------------------------------------- |
| பொதுளிய - நிறைந்த, கண்படை - உறக்கம், பெறாஅது - பெறாமல், கழற்றுரை - இடித்துரை, துஞ்சுவது - இறப்பது. ஏமம் - இன்பம். | |
| | |