|
| | |
| வஞ்சியின் எழுச்சியுரை | |
| | |
| கருதிய காதற் களந்தனில் நீதான் | |
| ஒருமுறை இறங்கினை, திரும்பினை வறிதே! | 180 |
| காதல் எளிதெனக் கருதினை போலும் சாதல் எய்தினும் சலியா துழைப்பின் விரும்பிய வெற்றி அரும்புவ துறுதி; நால்வகை முயற்சியும் நயவா தொருமுறை | |
| தோல்வி கண்டுளம் தொய்ந்தனை யாயின் | 185 |
| ஆண்மை என்றதை அறைதலும் உண்டோ? நாண்மடம் பூண்ட நங்கையர் தம்மனம் எளிதாய் இசைந்திடின் பெண்மையும் ஏது? மறுத்தும் வெறுத்தும் மாறியும் சீறியும் | |
| தடுத்தும் உரைப்பதே தையலர் இயல்பு; | 190 |
| தொடுத்து முயன்றால் தோள்புணை யாகக் கொடுத்தல் உறுதி; கோமகன் நீயும் அடுத்தடுத் தவள்பால் அணுகுதல் வேண்டும்; தோல்வி கண்டுளம் துவளுவை யாயின் | |
| பால்மொழி நின்பால் பரிவுறல் யாங்ஙனம்? | 195 |
| மறுத்தனள் அவளென உரைத்தனை இளைஞ! ஒருத்தி யவள்முனம் ஒருமுறை யேனும் கருத்தினை விளக்கிக் கழறிய துண்டோ? அவள்கருத் துன்பால் அறைந்ததும் உண்டோ? | |
| மூங்கை நிலையில் மொழியா திருந்துபின் | 200 |
| ஆங்கவள் நெஞ்சம் அளித்திலள் என்றே வீண்குறை கூறினை; தனிமையில் அவளைக் காண்கிலை வீணில் கலங்குதி மடவோய்! ஆதலின் அறிவ! அவள்பாற் செல்லுதி! | |
| எத்திறத் தவள்மனம் உவக்கும் எனவுணர்ந்து | 205 |
| அத்திறத் தானே அணுகுதி பயன்தரும்; பெண்மனம் என்பது கன்மனம் அன்றே உண்மையின் விரும்பும் ஒருவனைக் காண்புழி | |
--------------------------------------------------------------- |
| பால்மொழி - பூங்கொடி, | |
| | |