|
| வெண்ணெயின் உருகும் தன்மையை தாகும்; | |
| ஐயா! நீயும் அவள்பாற் சென்று | 210 |
| பொய்யா மனத்துப் பூத்துள காதலை எய்யா துரைத்தனை யாயின் அந்தக் கொய்யாக் கனியைக் கொய்திடல் ஆகும்; ஒய்யென விரை'கெனக் கோமகற் குரைத்தலும்; | |
| | |
| கோமகன் எழுச்சி | |
| | |
| திரியின் பிழம்பு சிறிது சிறிதாகக் | 215 |
| குறுகி அணைந்து மறையும் நிலையில் குறைதிரி தூண்டிக் குறையா நெய்யும் ஊற்றிட நிமிர்ந்தொளி ஓங்குவ தென்னச் சாற்றிய காமம் தளர்ந்திறும் நிலையில் | |
| வீற்றிருந் தோனை விறலி தூண்டி | 220 |
| ஒல்கா ஆசையை ஊட்டின ளாகக் கொல்லும் காமம் கொழுந்துவிட் டெழுந்து செல்லும் குருதியில் சேர்ந்துடல் கனல, `ஒருவர்நெஞ் சொருவர் உற்றறி கில்லேம்; | |
| அறியாப் பிழைக்கும் உரியவன் யானே; | 225 |
| இருவர் மனமும் இவ்வணம் துயருறல் சரியிலை; இன்றே சார்ந்தவட் குரைப்பேன்; யாண்டுளாள் பூங்கொடி? யாங்ஙனம் அணுகுதல் வேண்டும்? விறலீ! விளம்புதி கொல்லோ?' | |
| என்றுளம் ஏங்கி இரங்கினன் வேண்ட, | 230 |
| | |
| பூங்கொடியை அடையும்வழி | |
| | |
| `வேங்கை நகரெனும் வியன்பெரு நகரினுள் பூங்கொடி புகுந்து புதுமைத் தமிழிசை ஆங்கண் வருவோர்க் கன்புடன் பயிற்றி நின்றனள்; நீயும் சென்றவட் குறுகி | |
| ஒன்றிப் பழகி உயர்தமிழ் இசைபயில் | 235 |
--------------------------------------------------------------- |
| எய்யாது - சளைக்காமல், ஒய் - விரைவுக்குறிப்பு. ஒல்கா - அடங்காத, கனல - எரிக்க. | |
| | |