|
| குழுவில் இடம்பெறு, கொக்கென நடந்திரு, பழகுறும் பாவையின் நற்பதம் நோக்கி நழுவா வகையில் நயந்துரை மொழிந்திடு, அழகிய அவளுடல் ஆடவன் நினக்கு | |
| விருந்தாம் நிலையில் வென்று திரும்புதி! | 240 |
| பொருந்தா மனமும் திருந்திய தாகிப் பொருந்தும் மணம்பெறப் பூவை தன்னொடு திரும்புநன் னாளைத் தேர்ந்தெதிர் நோக்கிக் கண்படை பெறாது காத்திவண் கிடப்பேன் | |
| திண்மன முடையாய் செல்லுதி' என்றனள்; | 245 |
| | |
| கோமகன் பூங்கொடியைச் சார்தல் | |
| | |
| வஞ்சி உரைத்தவை செஞ்சொல் எனக்கொண்டு எஞ்சாச் செல்வன் எளிமையை னாகி வேங்கை நகரில் பூங்கொடி தன்பால் தேங்கிய ஆர்வலன் சேர்ந்தனன்; ஒரு நாள் | |
| தமியல் தானே நின்றவள் முன்னர்க் | 250 |
| குறுகினன் சென்று `கூர்விழி நல்லாய்! ஒருமொழி நின்பால் உரைத்திட விழைந்தேன்; | |
| | |
| திருமணங் கொள்கெனச் செப்பல் | |
| | |
| சிறியவள் நீதான் திருமணம் பெறாஅது துறவுளம் கொண்டு குறளகம் புக்க | |
| காரணம் என்கொல்? கடிமணம் கொள்ள | 255 |
| ஆரணங் குன்னை அகத்தினில் நிறுத்தி நாடொறும் தொழூஉம் ஆடவர் உளரெனச் சேடிய ரேனும் செப்பிலர் கொல்லோ? வாடிய இளங்கொடி வாழ்வை வெறுத்தது | |
| முறையன் றெனினும் உரிமைஎன் றாகும்; | 260 |
| ஆயினும் பிறராம் ஆடவர் தம்மை ஆயுள் முழுதும் அனலிடைப் புழுவென வீயுறச் செய்வது வேல்விழி முறையோ? சேயிழை! என்மொழி சினவா திதுகேள்! | |
| கன்னியர் என்போர் காதலை மதிக்க | 265 |
--------------------------------------------------------------- |
| பூவை - பூங்கொடி, தொழூஉம் - தொழும், வீயுற - அழிய. | |
| | |