|
| முன்னுதல் வேண்டும் முரணின ராயின் பெண்மைக் கிழுக்கெனப் பேசுமிவ் வுலகம் எண்ணித் துணிக' என்றனன் கோமகன்; | |
| | |
| பூங்கொடியின் மறுமொழி | |
| | |
| பூங்கொடி அவன்மனம் புரிந்தன ளாகி | |
| `வீங்கிய மனத்து விறலோய் கேண்மோ! | 270 |
| மலர்தொறும் நன்மணம் மற்றவர் செயற்கையால் நிலவுதல் இல்லை இயற்கையின் நிலைமை; திருமண நினைவும் செயற்கையில் தோன்றி வருவதும் இல்லை, மனத்தின் இயற்கை; | |
| இல்லறம் ஒருபெரும் நல்லறம் இதனை | 275 |
| அல்லறம் எனநான் அயர்த்தும் புகலேன்; தனிமை வாழ்வினும் துணையுடன் வாழ்வதே இனிமை எனப்புவி இயம்பக் கேட்டுளேன், ஆயினும் பொதுப்பணி ஆற்றுவோர் சிற்சிலர் | |
| தோயுமிவ் வின்பம் துறப்பது மேலென | 280 |
| ஆயும் புலத்தால் அறிந்துளேன் எனினும் காவியும் மணியும் கடுவிலங் குரியும் பூவிரி கானும் பூண்டேன் அல்லேன், உள்ளத் தெழூஉம் உணர்ச்சிகள் அடக்கி | |
| உள்ளம் துறந்தேன் உலகம் துறந்திலேன், | 285 |
| எள்ளத் தனையும் எழுச்சியில் விழாஅது தெள்ளத் தெளிந்து திருமணம் ஒரீஇ இனமும் மொழியும் ஏற்றமுற் றோங்க மனம்வைத் துழைத்திட வாழ்வு கொடுத்துளேன், | |
| அருளறம் பூண்டது குறளகம், ஆதலின் | 290 |
| தெருளும் அனையொடு சேர்ந்தவண் உறைவேன்; | |
| | |
| ஒருதலைக் காமம் | |
| | |
| நிறைஎனப் படுவது இருதிறத் தார்க்கும் பொதுவென நினையாப் புன்மனம் தாங்கி ஆடவர் திரியின் யானென் செய்வல்? | |
--------------------------------------------------------------- |
| முரணினர் - மாறுபட்டனர், உரி - தோல் ஆடை, கான் - காடு, எழூஉம் - எழும், விழாஅது - விழாமல், ஒரீஇ - நீக்கி. | |
| | |