|
| ஒருதலைக் காமம் உடையவர் தாமே | 295 |
| வருதுயர்க் கடலுள் மடிவது திண்ணம் மற்றவர் மனத்தை மதியா ராகிச் சுற்றுதல் இழிதகைத் தொழிலே அன்றோ? | |
| | |
| காதற் கொடுமைகள் | |
| | |
| காதல் என்றுல கோதும் பெயர்தான் | |
| `ஏது வாக இயற்றும் கொடுமைகள் | 300 |
| எத்துணை எத்துணை! கானல்நீர் இதனை நத்தின ராகி நலிவது பேதமை; பெண்மை பெண்மைஎனப் பேசி மகளிரைக் கண்ணை மறைத்துக் கருவியென் றடிமையென் | |
| றெண்ணுங் கொடுமை ஏகுவ தெந்நாள்? | 305 |
| காமங் கடந்த காரிகையர் தம்மைத் தீமனம் கொண்டோர் பழிமொழி செப்பிக் காப்பிலாப் பொருளெனக் கருதிக் கவர்ந்திட மோப்பம் பிடிக்க முயலும் கள்வர் | |
| பல்கினர்; இளையோய்! பண்பிலா இம்மொழி | 310 |
| சொல்லுதல் இனிமேல் தொலைகநீ பெரும! எண்ணித் துணிந்ததே இப்பணி' எனச்சொலக் | |
| | |
| கோமகன் ஏக்கம் | |
| | |
| கண்ணும் முகமும் கருத்துத் தலைகவிழ்த் துள்ளம் கலங்கி உறுநடை தளர்ந்து | |
| பிறிதொரு பாங்கர்க் குறுகின னாக, | 315 |
| முறுகிய காமம் குறைந்திலன் இவன்எனக் கருதிய பூங்கொடி கலங்கிய மனத்தள் ஆடவர் மனநிலை அறிகுநர் யாரெனத் தோடலர் மாலை சூடிய சண்டிலி | |
| துணியிற் பிரியா திருந்தனள் அவளே. | 320 |
--------------------------------------------------------------- |
| காப்பிலா - காவலில்லாத, தோடலர் - இதழ்விரிந்த. | |
| | |