பக்கம் எண் :

பெருநிலக்கிழார் வாழ்த்திய காதைபக்கம் : 151

 
  வன்பாற் பெறுதல் வரன்முறை யன்றே!
ஆசை யரும்பா அரிவையின் நெஞ்சில்
 
  பேசிய காதற் பெருங்கனி பறிக்கக் 25
  கூசினை யல்லை, கொடுமதி விடுமதி;
பாலுணர் வகற்றிய பாவையின் நல்லுளம்
காலள வேனும் கருத்திற் கொண்டிலை,
விழையா ஒருத்தியை விழையா நின்றனை,
 
  பிழையாம் அதனைப் பேணி அகன்றிலை, 30
  கிட்டா தாயின் வெட்டென மறத்தலைக்
கற்றா யலைநீ, காளைப் பருவம்
பெற்றாய் அதன்மனம் பெற்றாய் கொல்லோ?
பாலையில் தண்புனல் பருகிட முனைந்தனை,
 
  காலையை இரவெனக் கருதி அலைந்தனை, 35
  கொல்லும் காமத்துக் கோட்படா தொழிமதி,
அல்லும் பகலும் அரும்பெரும் பணியில்
செல்லும் மகளின் செந்நெறிப் புகுந்து
செல்லல் விளைத்திடல் தீதினும் தீது'என
 
  நல்லறி வுறுத்தினள் நங்கைஅச் சண்டிலி; 40
     
 

கோமகன் வியப்பு

 
     
  கள்ளவிழ் கோதை கழறிய உரைகேட்
டுள்ளமும் உடலும் புழுங்கின னாகிக்
கள்ளுண் டான்போற் கலங்கினன் செல்வோன்,
`காவயிம் வல்லான் கற்பனை தூண்டும்
 
  ஓவியம் என்ன உருவம் உடையள், 45
  பாலும் பழமும் பஞ்சணை மலரும்
நாலும் விழையும் நல்லிளம் பருவம்,
வேலும் வாளும் மானும் விழியள்,
காமக் கோட்டத்துக் கடவுட் சிலையிவள்
 
  வாமக் காளையர் வழிபடு தெய்வம், 50

---------------------------------------------------------------

  செல்லல் - துன்பம், வாமம் - இளமை.