பக்கம் எண் :

பக்கம் :160பூங்கொடி

 
  உடலும் உயிரும் ஒருங்குடன் நடுங்கப்
படரிருள் அகத்தில் பரவிய தந்தோ!
சுடரொளி அவிந்தது துயரெனை அணைந்தது,
 
  தாங்கருந் துயரத் தடங்கடல் மூழ்கி 25
  நீங்கா உயிர்ப்பொறை தாங்கி நாளெலாம்
உண்ணலும் உறங்கலும் எண்ணிலே னாகி
மண்ணகத் திருந்து வாழும் காலைக்
காலம் என்னும் கோல மருத்துவன்
 
  ஞாலத் தியற்கை நன்கனம் உணர்த்தி 30
  மாறா மனப்புண் மாற்றின னாகத்
தேறினேன் ஆயினும் சிந்தையில் அவளுரு
மாறிய தில்லை; மனத்தவள் விழைந்த
 
     
 

நினைவுச் செயல்

 
     
  ஆடலும் பாடலும் அளாவிய இன்னொலி  
  வீடகம் எதிர்ந்து விரவிட நினைந்து 35
  நாடொறும் அவ்வொலி நான்செவி மடுக்கத்
தேடரும் செல்வம் வாரித் தெளிப்பது
தொழிலாக் கொண்டுளேன், தூயவள் நீஎன்
விழியிடைப் படலும் மீண்டனள் என்மகள்
 
  என்னும் உணர்வே என்னுளத் தெழுந்தது; 40
     
 

வேண்டுவது உரை எனல்

 
     
  புண்ணிய மகளே! பூங்கொடி அன்னாய்!
பெண்மையின் உருவே! கண்ணின் மணியே!
மாதமிழ்ச் செல்வி! வாழிய நெடிதே!
யாதுநீ வேண்டினும் என்பால் உரைத்தி
 
  தீதென நினையேல் செவ்விதிற் கொள்'கென 45
  மாதவள் தன்பால் ஓதினர் அக்கிழார்;  
     
 

பூங்கொடி நன்றி கூறல்

 
     
  `தகவுடைப் பெரியோய்! தந்தாய் அன்பினை  

---------------------------------------------------------------

  அணைந்தது - தழுவியது, பொறை - சுமை, தந்தாய் - கொடுத்தாய்.