|
| மிகுபொருள் அதனின் வேறொன் றில்லை, உளத்தெழும் அன்பும், உணர்ச்சியின் வாழ்த்தும், | |
| பெறத்தகும் அளவு பெற்றபின் எனக்குக் | 50 |
| கொளத்தகு பொருளெது? வளத்திரு மிகுத்தோய்! நன்றி யுடையேன்' என்றவள் கூறலும், | |
| | |
| தந்தாய் எனுஞ்சொல் தந்த மகிழ்ச்சி | |
| | |
| `தந்தாய் எனுஞ்சொற் புகன்றனை தாயே! நந்தா விளக்கே! நான்பெறும் மகிழ்ச்சிக் | |
| கெல்லையொன் றுரைக்க இயல்வதொன் றில்லை; | 55 |
| அன்பின் விளைந்த அம்மொழி கேட்டுளம் இன்பில் திளைத்தேன் ஏழிரண் டாண்டின் முன்னர்க் கேட்டஅம் மொழியினை நின்வாய் மொழிந்திடக் கேட்டேன் மீண்டும் அதனை | |
| மொழிகதில் லம்ம! மொழிகதில் லம்ம! | 60 |
| செந்தா மரைமுகச் செல்விநீ மொழிந்த `தந்தாய்' எனுஞ்சொல் தந்தபே ரின்பம் எத்துணை! எத்துணை! எவ்வணம் புகழ்வேன்!' என்றுளம் கசிய இணைவிழி கசிய | |
| நின்றனர் ஆங்கண்; நேரிழை உருகித் | 65 |
| | |
| பூங்கொடி ஆறுதல் புகலுதல் | |
| | |
| தந்தை வடிவேல் நினைவுளந் தாக்குறத் `தந்தாய்! தந்தாய்! தணிகநின் துயரம்; `எந்தாய்! எந்தாய்! எனைநின் மகளெனத் தந்தேன் தந்தேன் தவிர்கநின் கவலை; | |
| உலகிற் பிறந்தோர் ஒருநாள் மறைதல் | 70 |
| நிலைஇய இயற்கை; நீக்கலும் அரிதே உறவின் பாற்செலும் உளத்தெழும் அன்பினைப் | |
--------------------------------------------------------------- |
| இன்பில் - இன்பத்தில், எந்தாய் - எம் தந்தையே, நிலை இய - நிலைத்த. | |
| | |