|
| பிறரிடைச் செலுத்தும் பெற்றிமை வாய்ப்பின் உற்றவர் பிரிவினிற் பெற்றிடும் மனநோய் | |
| அற்றிடும்; இஃதென் பட்டறி வாகும்;' | 75 |
| எனவிழி ததும்ப இசைத்தனள் பூங்கொடி; | |
| | |
| கிழார் மகிழ்ந்து வாழ்த்துதல் | |
| | |
| மனமிகக் களித்த மாபெருஞ் செல்வர் கைவிரல் கொண்டு கண்மலர் துடைத்து மெய்ம்மயிர் சிலிர்த்து `மீண்டஎன் மகளே! | |
| வாழிய நெடிதே! வாழிய மகளே! | 80 |
| சூழிடர் தொலைத்தனை! சுடரொளி துலக்கினை! வாழ்வை மறுமுறை வளம்பெறச் செய்தனை; | |
| | |
| வேண்டுவன கொள்க எனல் | |
| | |
| இளங்கொடி நினக்குயான் செய்யற் பாலதென்? விளங்கிட உரைத்தருள் வேண்டுவ திதுவென; | |
| எப்பொரு ளாயினும் அப்பொருள் ஈவேன்; | 85 |
| ஒப்பிலாச் செல்வி! உண்மையின் உரைக்கின் `ஈதல்' எனுஞ்சொல் ஏற்புடைத் தன்று; தீதுதீர் செல்வமும் செழுமனை யாவும் நின்பொருள், வேண்டுவ நீயே கொள்க' | |
| இன்பினில் திளைத்தவர் இவ்வணம் புகல, | 90 |
| | |
| பூங்கொடி மறுத்தல் | |
| | |
| `அன்புடைப் பெரியோய்! பொதுப்பணி ஆற்றிட என்பும் பிறர்க்கென எடுத்துளேன் வஞ்சினம் எனக்கென ஒருபொருள் எதற்கின ஐய! மனக்கினி யாய்!எனை மன்னித் தருள்'கெனத் | |
| தனக்கென வாழாஅத் தையல் மொழிந்திட, | 95 |
| | |
| கிழார் மீண்டும் வேண்டல் | |
| | |
| `ஆருயிர் மகளே! அவ்வணம் உரையேல், | |
--------------------------------------------------------------- |
| பட்டறிவு - அனுபவம், என்பும் - எலும்பும், மனக்கு - மனத்துக்கு. | |
| | |