|
| சீரிய நின்பணி செயற்பட வேனும் கோரிய என்மொழி கொண்டருள் செல்வீ! மீறிய அவாவின் வேண்டுவல் யாதெனக் | |
| கூறுக நீ'எனக் குறையிரந் தனரே! | 100 |
| | |
| நூலகம் அமைக்கப் பூங்கொடி வேண்டுதல் | |
| | |
| பெருமகன் உளத்து வருவிருப் பகற்ற ஒருவழி யறியாள் ஒப்பின ளாகித் `திருமிக வுடையாய்! செயிரறு கொடையாய்! ஒருபெரும் நூலகம் ஊரிடை நிறுவக் | |
| கருதுவ துடையேன், காணும் அதுதான் | 105 |
| தென்மொழி முதலாப் பன்மொழிச் சுவடிகள் நன்மை தருவன நாடித் தொகுத்தே யாண்டும் இதற்கிணை இல்லெனு மாறு பூண்டநற் புகழொடு பொலிவுறல் வேண்டும்; | |
| | |
| தனித்தனி இடங்கள் | |
| | |
| தொன்னூல் பலவும் துறையறி புலவர் | 110 |
| அந்நூல் துருவி ஆய்வுரை கண்டு நன்னூல் பலப்பல நல்குதற் பொருட்டும், கற்பனை வல்ல காவியப் புலவர் சொற்பொருள் பொதிந்த தொழுதகு காப்பியம் | |
| பற்பல படைக்க முற்படும் பொருட்டும், | 115 |
| நுழைபுலம் தரூஉம் நூலகம் அதனுள் எழிலும் அவர்தமக் கேற்றநற் பொருளும் கழிமிக நிரம்பிய கண்கவர் இடங்கள் தனித்தனி அமைத்துத் தருதலும் வேண்டும் | |
| கனித்தமிழ் தழைக்கஓர் கருவி ஆகும் | 120 |
| எனத்தகும் நினைவால் ஈண்டியது புகன்றேன்; | |
--------------------------------------------------------------- |
| கோரிய - வேண்டிக்கொண்ட, துருவி - ஆராய்ந்து. | |
| | |