பக்கம் எண் :

பக்கம் :164பூங்கொடி

 
 

நூலகத்திற்கு மாளிகை தர வேண்டுதல்

 
     
  ஈங்குநின் னுரியன எண்ணில மாளிகை
ஆங்கவை தம்முள் ஓங்கிய நூலகம்
ஆக்கிட ஒன்றனை அளித்திடல் நின்கடன்
 
  தேக்கிய நிதியும் செறிந்துள தறிவேன்; 125
  ஈதற் பண்பும் இயல்பான் அமைந்தனை,
ஆதலின் நூலகத் தரும்பெரும் பணிக்குப்
பொறுப்புடன் அருளும் பொருளும் அளித்து
விருப்புடன் காக்க வேண்டுவல் யானே,
 
  இஃதென் விழைவாம்' என்றனள் பூங்கொடி; 130
     
 

கிழார் உறுதியளித்தல்

 
     
  `அஃதுன் விழைவெனின் ஆகுக அவ்வணம்
நன்று நினைப்பின் அன்றுசெயல் வேண்டும்;
இன்றே முடிப்பேன், இரவென நின்றேன்,
காலை புலர்ந்ததும் கடிதினில் முடித்து
 
  நாளை நூலகம் நடுவூர் ஆங்கண் 135
  மிளிரக் காண்குவை; மேம்படும் நின்மனம்
குளிரக் காண்பதென் குறிக்கோள் ஆகும்'
எனுமொழி இயம்ப இளங்கொடி மகிழ்ந்து
 
  நனிமிகு நன்றி நவின்றே கினளே. 139
     

---------------------------------------------------------------

  துருவி - ஆராய்ந்து, தரூஉம் - தரும்.