|
|
| பூங்கொடி வருதல் | |
| | |
| பெருநிலக் கிழவர் பெட்புடன் மகிழ்ந்தே அருளிய வாழ்த்தும் அவ்வூர் நாப்பண் ஞாலங் காணாக் கோலங் கொண்ட நூலகம் அமைக்க நுவல்மொழி உறுதியும் | |
| பெற்றநற் பூங்கொடி குற்றமில் மனத்துள் | 5 |
| உள்றெழு மகிழ்வால் சொற்றமிழ் இசைதரு மாட மாளிகை மன்றினும் புகுதரக் கூட வாயிலில் குருதி கண்டனள்; | |
| | |
| பூங்கொடி மயக்கம் | |
| | |
| கண்டவள் நடுங்கிக் கால்தடு மாறிச் | |
| `சண்டிலி சண்டிலி' என்றுரை சாற்றியும் | 10 |
| கண்டிலள் அவளைக் கடும்பே ரமைதி கொண்டு திகழ்ந்தது கோவுயர் மாளிகை; அஞ்சிய ஒண்டொடி ஆங்காங் கோடித் துஞ்சுவள் அவளெனத் துருவினள் யாண்டும் | |
| காண்கில ளாகிக் கலங்கிய அம்மகள் | 15 |
| தூண்களி னிடையே துணுக்குற நோக்கினள்; மணமக னாகும் மனத்தொடு வந்தோன் பிணமக னாகிப் பிறிதுறக் கிடந்த கொடுமை காணலுங் கோவெனக் கதறிச் | |
| சுடுதழல் மிதித்தெனத் துவண்டு சுருண்டு | 20 |
| மயங்கி விழுந்தனள் மண்மிசை யாங்கே; | |
| | |
| மயக்கந் தெளிந்து புலம்பல் | |
| | |
| மயங்கிருள் தெளிய வைகறை வந்துற வயங்கிணர்க் கொடிநிகர் மயங்கிய பூங்கொடி சற்றே தெளிவுறச் சட்டென எழுந்து | |
|
| | |