பக்கம் எண் :

சிறைப்படு காதைபக்கம் : 175

 
  `பற்றா மாக்கள் பகைமுடித் தனர்கொல்? 25
  எற்றால் இந்நிலை இம்மகன் உற்றனன்?
உற்றார் எவரும் உறாஅ விடத்துச்
செற்றார் இவனைச் செகுத்தனர் அந்தோ!
துணையாந் தோழியும் யாங்குத் தொலைந்தனள்?
 
  அணையாப் பெரும்பழி அணையும் அந்தோ! 30
  இசைக்கென வந்தவன் இறந்தனன் என்னும்
வசைக்கிலக் காக வாய்த்ததிந் நிலையே!
 
     
 

செய்தித்தாள்களின் செய்கை

 
     
  கொலைத்தொழில் ஒன்றே கலைத்தொழி லாகத்
தலைப்பிடுஞ் செய்தித் தாள்களும் உண்டே!
 
  நாண்சிறி தின்றி நாட்டினில் உலவி 35
  வீண்பழி சுமத்தும் வெள்ளை இதழ்களும்
நாடொறும் தெருவில் நடமில் உண்டே!
கூடுமிவ் விதழ்கள் `கொலைகொலை' என்றே
பாடும் பாடும் பாரெலாம் பாடும்
 
  வசைப்பணி புரியும் வாய்க்கிது விருந்தே! 40
  இசைப்பணிக் கீதோர் இழுக்கே யன்றோ?  
     
 

கோமகனை நினைந்திரங்கல்

 
     
  பரிவுக் குரியன் பாவம் இம்மகன்!
முறுகிக் கிளர்ந்து மூண்டெழு காமம்
பெருகிப் படர்ந்து பெட்புற் றென்னைத்
 
  திருமணஞ் செய்வான் திரிந்தனன் பலநாள்; 45
  பண்ணிசை ஆய்ந்து பயின்றிடக் கருதி
உண்ணிறை அவாவொடு நண்ணினன் ஈண்டு
மண்ணிரை யாக மாய்ந்தனன் அந்தோ!
எண்ணிய தொன்றும் ஏற்றிலன் பாவி!
 
  வேட்டவன் ஒருநாள் விழைவினை என்பாற் 50
  காட்டினன் குறிப்பால்; கடிந்துரை கூறுவேன்  

---------------------------------------------------------------

  பற்றாமாக்கள் - பகைவர், எற்றால் - எதனால், உறாஅ - பொருந்தாத.