|
| `ஒருதலைக் காமம் உடையவர் தாமே வருதுயர்க் கடலுள் மடிவது திண்ணம்' என்ற அம்மொழி இன்று பலித்ததோ? | |
| அன்றது மொழிந்தமைக் கின்று வருந்துவல்' | 55 |
| என்று பலப்பல இரங்கிப் புலம்பி, | |
| | |
| கிழாரிடம் முறையிடல் | |
| | |
| உறுதுணை யாகிய பெருநிலக் கிழார்பால் அறைகுவல் விரைந்தே என்றாங் கணுகித் தன்னையும் பண்ணையும் முன்னி வந்தவன் | |
| பன்னிய செய்தியின் பான்மை முழுவதூஉம், | 60 |
| மேனாள் தொட்டு மெல்லியல் அவன்மொழி ஏலா தியாவும் எதிர்த்துரை புகன்றதூஉம், காதலின் பெயராற் கரையிலான் இவனால் ஏதம் விளையினும் விளையுமென் றெண்ணிச் | |
| சண்டிலி சூழ்துணை கொண்டு நின்றதூஉம், | 65 |
| வண்டென அலைவோன் வாளிற் படுகொலை யுண்டு மனையினில் ஒருபாற் கிடப்பதூஉம், உறுதுணை யாகிய ஒண்டொடி சண்டிலி பெருமனை நீங்கிப் பெயர்ந்து போயதூஉம் | |
| அரிவை யாவையுந் தெரிதர வுரைத்து | 70 |
| வருபழி யஞ்சிவாடி நின்றனள்; | |
| | |
| கிழாரும் உடன்புறப்படல் | |
| | |
| பெருநிலக் கிழார்அப் பேதையைத் தேற்றி `மருளுதல் தவிர்கஎன் மகளே! ஒன்றும் வெருவுதல் வேண்டா, வேண்டுவ செய்வல்; | |
| வருகுவென் யானும் வஞ்சி நின்னுடன் | 75 |
| எழு'கெனக் கூறி எழுந்தனர் ஆங்கே; | |
| | |
| காவலர் வருதல் | |
| | |
| பண்ணும் இசையும் பயில்தரு மாளிகைக் | |
--------------------------------------------------------------- |
| அறைகுவல் - கூறுவேன், பன்னிய - கூறிய. | |
| | |