|
| கண்ணொரு கொலைவினை நிகழ்ந்தென் றறிந்த காவற் படையினர் கடுகி வந்தனர்; | |
| ஏவல் மாக்கள் இருவரை வினவினர்; | 80 |
| மாளிகை முழுமையும் சூழுறும் அறைகளும் வாளிற் படுமகன் வடித்தசெங் குருதி தோய்ந்து காய்ந்து தூணிடைக் கிடக்கும் உடலும் பிறவும் உற்று நோக்கினர்; | |
| காவற் றலைவர் கற்போர் தம்மை | 85 |
| `நீவிர் அறிந்தன நிகழ்த்துக' என்றனர்; | |
| | |
| மாணவன் கூற்று | |
| | |
| `கொலைபடு கோமகன் கலையிசை வேட்டுப் பலநாள் எம்முடன் பயின்றனன் அறிவோம்; ஈதொன் றன்றி வேறொன் றறியோம்; | |
| தீது நிகழ்வில் ஏதும் தெரியோம்; | 90 |
| எமக்கிசை யூட்டுங் குலக்கொடி யாகிய மடக்கொடி பூங்கொடி மற்றவள் தோழி சண்டிலி என்பாள் தன்னுடன் கூடி விண்டொட நிவந்த வியன்பெரு மாளிகை | |
| வதிவதும் அறிவோம் வாய்மையிஃ தாகும்; | 95 |
| மதிலரண் சூழும் மாமனை யிதனுள் எதிரிகள் எவரும் எளிதிற் புகார்'என மாணவர் தம்முளோர் மாணவன் இயம்பக் | |
| | |
| காவலர் குறுக்கு வினா | |
| | |
| கரவிலா துரைத்ததைக் கேட்டஅக் காவலர், | |
| `அரண்படு மாளிகை ஆதலின் ஈண்டு | 100 |
| முரணியோர் உட்புக முடியா தென்றனை, அவ்வா றாயின் அவனொடு முரணியோர் எவ்வெவர் என்றெமக் கியம்புதி' என்றனர்; | |
| | |
| மாணவன் மறுமொழி | |
| | |
| முற்படு மாணவன் `முரணியோர் உண்டெனல் | |
| | |
| | |