|
| கற்பனை யாகும்; காப்பமைந் துளதால் | 105 |
| மற்றவர் புகுந்து செற்றனர் என்று சொற்றிட இடமிலை; சொல்லுமென் கருத்தைச் சுற்றி வளைத்து மற்றொரு பொருளைப் படைத்திட வேண்டா பணிவுடன் வேண்டுவல்' | |
| | |
| காவலர் குறுக்கீடு | |
| | |
| எனவாங்கு | 110 |
| முடிக்குமுன் காவல் முதல்வர் மறித்துத் `துடித்த லின்றிச் சொல்லுக, உண்மை கிடைக்குமென் றெண்ணிக் கிளறுவ தெம்கடன்; மற்றவர் தம்மால் மாண்டிலன் என்றால் | |
| தற்கொலை என்று சாற்ற நினைந்தே | 115 |
| இவ்வணம் புகன்றீர் எனுங்கருத் துடையேன் ஒவ்வுவீ ராயின் உரைமின்' என்றனர்; | |
| | |
| மாணவன் ஏக்கவுரை | |
| | |
| `எவ்வா றவ்வணம் இளம்புவல் ஐய! செவ்விதிற் றெரியும் செயப்படு கொலையைத் | |
| தற்கொலை என்று சாற்றுதல் தகுமோ? | 120 |
| எற்கெனை யிங்ஙனம் இடையிடை மறித்துப் பற்பல வினவிப் பாடுறச் செய்கிறீர்? எனக்கும் கொலைக்கும் எவ்வகைத் தொடர்பும் மனத்தும் நினைக்க வழியிலை; என்மொழி | |
| அனைத்தும் வாய்மை அறிகதில் ஐய!' | 125 |
| எனப்புகல் மாணவன் ஏங்கி நின்றனன்! | |
| | |
| காவலர் கனிவுரை | |
| | |
| `உம்மை ஐயுறும் உள்ளம் எமக்கிலை மெய்ம்மை தெரிவான் விடுத்தனென் இவ்வினா! கடுமொழி யன்றிது கனிமொழி யாகும் | |
| விடுகநும் அச்சம் விளம்புக மெய்யே; | 130 |
--------------------------------------------------------------- |
| தெரிவான் - தெரிய. | |
| | |