|
| தீதுதீர் செயலி தேன்மொழி பூங்கொடி யாதும் பழியுறாள்; வேதனை விட்டொழி; | |
| ஆழ்கடல் உலகில் அவள்நிகர் பெண்மகள் | 160 |
| சூழினும் காண்கிலம்; தூயவள் தனக்குப் பாழ்மகன் இறந்தும் பழியினைத் தந்தனன் என்றனை யன்றோ? இறந்தும் தந்தனன் என்றதன் உட்பொருள் இயம்புதி கொல்லோ? | |
| இறந்தோன் உயிருடன் இருந்த காலை | 165 |
| அறந்தேர் தெரிவைக் காற்றிய பழியினைத் திறந்துளம் உரை'எனத் தெரித்தனர் காவலர்; | |
| | |
| இருந்தும் பழி இறந்தும் பழி | |
| | |
| `இசைதெரி வேட்கையன், இவனவள் பாற்கொளும் நசைபெரி துடையன், நாளுமந் நினைவால் | |
| உருகி உருகி மருகுவன், அவளை | 170 |
| மருவுதல் ஒன்றே வாழ்வின் குறியன், ஒருவுதல் நேரின் உயிரும் வேண்டிலன், இரவலன் போல இடையிடை அவள்வாற் குறுகுவன் தன்னுளக் குறிப்பினை விளம்புவன்; | |
| இல்லறம் அறவே வேண்டிலா இம்மகள் | 175 |
| புல்லும் இவனைப் பொருட்படுத் திலளே, ஆயினும் உண்மை அறியார் சிலர்சிலர் தாயினைஅலருரை சாற்றுதல் அறிவேன், இருந்தும் பழிமொழி இயற்றினன் பாவி | |
| இறந்தும் அம்மொழி ஏற்றினன் பாவி' | 180 |
| என்றுரை கூறி மாணவன் இருந்துழிக் | |
| | |
| காவலர் வினாவும் காரிகை விடையும் | |
| | |
| கன்றிய நெஞ்சொடும் கலையுணர் கிழாரொடும் வந்து நின்றனள் வழுவிலாப் பூங்கொடி; நொந்தவள் முகத்தினை நுண்ணிதின் நோக்கி | |
| முந்துறக் காவல் முதல்வர் வினவினர்; | 185 |
--------------------------------------------------------------- |
| செயலி - செய்கையினள், ஒருவுதல் - நீங்குதல். | |
| | |