|
| `ஈண்டிவ் விளையோன் கோமகன் என்பான் மாண்டமை பற்றி மங்கையுன் விளக்கம் வேண்டுவல் பூங்கொடி விளம்புக' என்னலும், `நெருநல் மாலை பெருநிலக் கிழாரின் | |
| பெருமனை புகுந்து பெரியவ ரவரொடு | 190 |
| நெடிதுரை யாடி நேரிசை பாடி விடியுமுன் னிரவில் மீளும் பொழுதிற் படிமிசை இவனுடல் படிந்தது கண்டு துடிமன முடையேன் தோழியைக் கூஉய் | |
| வயங்கிழை காணாது வழியொன் றறியாது | 195 |
| மயங்கி வீழ்ந்தனென் மற்றொன் றறியேன்' என்பது கேட்டோர் `இவற்கும் நினக்கும் முற்பகை யுண்டோ? மொழிக' என்றனர்; `பொதுப்பணி பூண்டேற்குப் புன்மைப் பகைமை | |
| எதற்கு? நிலமிசை எவரும் பகையிலேன்'; | 200 |
| `கொலையுணும் இம்மகன் கெடியிடை நின்பாற் பலமுறை வந்து பழகலும் உண்டோ?'; `ஆம்அவன் பலகால் அணுகுவான் என்பால் தோமறும் இசைபயில் தொழிலோன் ஆதலின்'; | |
| `எழில்மிகும் நின்பால் இளையோன் காதல் | 205 |
| விழைந்ததும் உண்டோ? மொழிந்ததும் உண்டோ?' | |
| | |
| கிழார் குறுக்கீடும் பூங்கொடி கலங்கா மொழியும் | |
| | |
| இவ்வுரை கேட்டாங் கிருந்திடுங் கிழவர், `செவ்விய இவட்குச் சிறுமை யூட்டும் அவ்வினா வெழுப்புதல் அடாஅது காவல! | |
| ஒவ்வும் முறையால் உண்மை ஓர்க' | 210 |
| இவ்வணம் கடிந்துரை இயம்பின ராகப் `பொதுநலம் ஒன்றே புரிபவர் எவர்க்கும் இதுபோல் இடுக்கண் இடையிடை வரலும் அதுதான் எளிதின் அகலலும் இயற்கை; | |
| சினவேல் ஐய! சிறுமைகள் நமக்கேன்? | 215 |
| வினவுக பெரும, வினவுக பெரும!' | |
| | |
| வினா விடை தொடர்தல் | |
| | |
| எழில்மிகும் நின்பால் இளையோன் காதல் | |
--------------------------------------------------------------- |
| வயங்கிழை - சண்டிலி. | |
| | |