|
| விழைந்ததும் உண்டோ? மொழிந்ததும் உண்டோ?'; `ஆம்ஆம் என்னை அம்மகன் விழைந்ததும் | |
| காம மொழிகள் கழறியதும் உண்மை' | 220 |
| என்றவள் செப்ப, `இசைந்ததும் உண்டோ? மன்றல் புரியநின் மனமொப் பினையோ?' என்றவர் வினவ, `இல்லற வாழ்வே வேண்டிலே னாகி விழைந்திப் பொதுப்பணி | |
| பூண்டுளேன் ஆதலின் புல்லும் அவன்மொழி | 225 |
| பொருளெனக் கொளாஅது போயினென்' என்றனள்; `ஆங்ஙன மாயின் அவன்றன் போக்கைத் தீங்கெனக் கருதிச் செற்றம் அவன்பாற் கொண்டதும் உண்டோ? கொடியன் இவன்எனக் | |
| கண்டு வெறுத்ததும் உண்டோ? உரை' என | 230 |
| `அவனுரை மறுத்துளேன் அவனை வெறுத்திலேன் சினமொழி தொடுத்துளேன் செற்றம் படைத்திலேன் ஆணும் பெண்ணும் அவரவர் கருத்தைக் காணும் பொழுது கழறுதல் இயல்பு | |
| விழைவோர் மற்றவர் விருப்பினைக் கேட்டல் | 235 |
| பிழையோ? உரிமை, என்றது பொறுத்தேன்' | |
| | |
| பூங்கொடி சிறைப்படல் | |
| | |
| என்றவள் செப்பினள்; ஏந்திழை மாற்றம் நின்றவர் செவியில் ஒன்றிய தெனினும் `கொன்றவர் யாரெனுங் குறிப்பறி காறும் | |
| காவலில் வைப்பதெங் கடமையும் ஆகு'மென் | 240 |
| றொருபிழை யறியாப் பெருமகள் அவளைச் சிறைசெய் தனரே முறையின் பெயரால்; | |
| குறைசெய் தனரே! குறைசெய் தனரே! | 243 |
--------------------------------------------------------------- |
| கொளாஅது - கொள்ளாது, ஏந்திழை - பூங்கொடி. | |
| | |