பக்கம் எண் :

பக்கம் :184பூங்கொடி

 
  கேட்பவர் மதியும் கேடுறின் நம்புவர்,  
  நாட்பட விளங்கும் நயவஞ்சம் என்றனர்; 30
  பசுப்போல் இருந்தனள் பாவி இவள்தான்
வெறுக்குங் கொலைத்தொழில் விளைத்தனள் என்றனர்;
நல்லவர் கெட்டவர் நாமுண ராவகை
உள்ளனர், என்ன உலகமிஃ தென்றனர்;
 
  பெண்ணுருக் கொண்டுள பேயிவள் என்றனர்; 35
  பெண்குலங் கெடுக்கும் பெற்றியள் என்றனர்;
இவ்வணம் ஊரார் இடுபழி கூறினர்;
 
     
 

நல்லோர் வருந்துதல்

 
     
  இவட்கோ இப்பழி! இழைத்தவர் எவரோ!
அவட்கோ கொடுஞ்சிறை! அடஓ கொடுமை!
 
  ஆவின் இயல்பும் அடங்கிய பண்பும் 40
  மேவிய மெல்லியற் கொடிக்கோ கொடுமை!
சொல்லும் செயலும் நல்லன புரிவோள்
கொல்லுந் தொழிலைக் குறிப்பளோ? கொடுமை!
செந்நெறிப் படரும் சேயிழை யிவட்கே
 
  இந்நிலை வருமெனின் என்னே வுலகம்! 45
  பெண்மைப் பண்பிற் கிலக்கணம் இவளே
உண்மைக் கழிவினை உலகந் தந்ததோ!
இரவும் பகலும் இனியநற் பணியே
புரியும் இவட்கோ புன்மொழி கொடுமை!
 
  வழுவாத் துறவும் வாய்மையுந் தூய்மையும் 50
  தொழிலாக் கொண்டவள் துயருறல் நன்றோ!
கலைபுரி யிவளோ கொலைபுரி செயலினள்?
இலைமதி அவர்க்கென இயம்புதல் சாலும்!
பலர்பலர் கூடிப் பண்பினர் இன்னன
 
  சொலுமொழி வாயினர் சோர்ந்து நின்றனர்; 55
     
 

இரவின் ஆட்சி

 
     
  கனவிலும் தீமை கருதா நல்லவட்
கினைதுயர் இவ்வணம் ஏற்படல் காணா
எரிகதிர்ச் செல்வன் ஒளிமுகங் குன்றி
வருந்திக் குடதிசை மறைந்தன னாகச்
 
  சுருள்படு பழுதை விரிபட அரவென 60