|
| மருள்படச் செய்யும் மாலைவந் துற்றது; கதிர்மதி காணாக் காரிரு ளாட்சி எதிர்மறைப் பொருளாய் எங்கும் படர்ந்தது; `வந்தநம் ஆட்சியை வாழ்த்துவம் வாரீர்! | |
| இந்தநல் லாட்சியை எதிர்ப்பவர் ஈங்கிலை | 65 |
| எதிர்ப்போர்க் காணின் ஒழிப்போம் வாரீர்! மதிப்போம் மதிப்போம் மயங்கிரு ளாட்சி! இருளின் ஆட்சி என்றும் வாழ்'கென ஆந்தையும் கூகையும் அலறின! அலறின! | |
| | |
| சிறையினுட் பூங்கொடி | |
| | |
| காரிரு ளாட்சியிற் கட்டுணும் மாந்தர் | 70 |
| கூரிய நெடுவேல் கொளுவிய காவலர் இருநிலம் மருவிய இருதிணை எனப்படும் பொருள்கள் யாவும் புவிமிசைச் சோர்ந்தன; நெஞ்சினை வருத்தும் நெடுந்துயர் ஒன்றும், | |
| துஞ்சுத லொழிந்த துணைவிழி யிரண்டும், | 75 |
| வஞ்சியின் மனத்து வளர்தமிழ் மூன்றும், சூழ்மதிற் சிறையினும் சோரா திருந்தன; தாழ்குழல் ஆங்குத் தனியிருந் தனளே; | |
| | |
| கதிரவன் தோற்றம் | |
| | |
| கொடுங்கோ லாட்சி நெடும்பகல் நில்லாது; | |
| மடம்படு மாந்தர் மதியொளி பெறுங்கால் | 80 |
| படும்படும் அந்தக் கொடும்பரின் ஆட்சி; உயிர்வரின் உக்குறள் ஓடுதல் போலக் கதிர்வர வறிந்து காரிருள் ஓடிப் பதுங்கி மறைந்தது, பகலவன் வளர்ந்தான்; | |
| | |
| அறமன்றத்தில் பூங்கொடி | |
| | |
| மறமிகு காவலர் வயங்கிழை தன்னை | 85 |
| அறங்கூ றவையத்து நிறுத்தின ராகத் திறம்பா வுரையினர் செவ்விய மனத்தினர் கொல்போல் ஒருபாற் கோடா நடுவர் | |
--------------------------------------------------------------- |
| உயிர் - உயிரெழுத்து, உக்குறள் - குற்றியலுகரம், கோல் - தராசு. | |
| | |