|
| பால்போல் முகத்துப் பாவையை நோக்கிக் | |
| குற்றஞ் சாற்றினர்; மற்றவள் மறுத்துச் | 90 |
| `செற்றேன் அல்லேன் செந்தமிழ் ஆணை; உற்றஇக் கொலையில் ஒருதொடர் பில்லேன்; அற்றைப் பொழுதில் அவணிலேன் ஆதலின் ஒன்றும் அறிகிலேன்; உண்மையிஃ' தென்றனள்; | |
| சிறைசெய் காவலர் சிற்சில வினவினர்; | 95 |
| மறைசெய் தறியா மங்கையுஞ் செப்பினள்; | |
| | |
| கிழார் சான்று கூறல் | |
| | |
| அவ்வுழை வந்துறும் அரும்பெறற் செல்வர் கவ்விய துயரினர் கலங்கிய விழியினர் பெய்வளை விடுதலை பேணிய நிலக்கிழார் | |
| அவையம் நோக்கி `ஆயிழை இவள்தான் | 100 |
| நவையறு செயலினள் நன்மனத் தாட்டி கோதை இவட்கும் கோமகன் கொலைக்கும் யாதும் தொடர்பிலை யான்நன் கறிவேன்; கொலைநிகழ் பொழுதில் இலைஅவள் அவ்விடை | |
| என்மனை யகத்துள் இசையமு தளித்துப் | 105 |
| பின்னிர விற்றான் பேதை மீண்டனள்' என்னலும், நடுவர் எடுத்துரை கூறினர்; | |
| | |
| நடுவர் தீர்ப்பு | |
| | |
| `மாமனை யகத்து மங்கை இசைத்ததை ஆமெனக் கொள்ளுதும்; ஆங்கவள் மீண்டபின் | |
| கோமகன் கொலையுணல் கூடும் அன்றோ? | 110 |
| மீளுமுன் நிகழ்ந்ததை மெய்ப்பிக்க ஒன்றிலை; மூளும் பகையும் முனிவும் அவன்பாற் கொண்டவள் இவளெனக் குறிப்புகள் ஈண்டுள; சண்டிலி என்னுந் தையலுங் காண்கிலள் | |
| ஆதலின் இருவரும் அப்பெருங் கோமகன் | 115 |
| சாதலைக் குறித்தனர் என்பதே சாலும்; அன்றெனின் இருவருள் ஒருவர் மற்றவர் செயலுக் குறுதுணை என்பதே உறுதியாகும்; | |
--------------------------------------------------------------- |
| உயிர் - உயிரெழுத்து, உக்குறள் - குற்றியலுகரம், கோல் - தராசு. | |
| | |