பக்கம் எண் :

சிறை விடு காதைபக்கம் : 187

 
  ஒறுத்தற் குரியர்'இவளும் அவளும் 120
  சிறையகம் இம்மகள் செல்க; அம்மகள்
மறைபுலம் நாடிச் சிறைசெயல் வேண்டும்';

 
     
 

பூங்கொடி மனத்துயர்

 
     
  தீர்ப்புரை பெற்றவள் சிறையகம் புகுவோள்,
யார்க்கொரு தீங்கும் இழைத்தே னல்லேன்,
 
  என்மொழி காக்க ஏற்றிடும் பணியில் 125
  புன்மையும் இன்னலும் புகுமேல் பொறுப்பேன்,
இறப்பே எனினும் சிரிப்புடன் ஏற்பேன்
மறப்பரும் வன்பழி வாய்த்ததே! கெட்டேன்!
எனப்பல நினைந்தே இரங்கினள் பூங்கொடி
 
     
 

துருவன் துணிவு

 
     
  அறங்கூ றவையம் அளித்த தீர்ப்பும் 130
  அறந்தேர் அரிவை அருஞ்சிறை பெற்றதும்
செய்தி இதழ்கள் தெள்ளிதின் உரைக்க
நையும் உளத்தினள் சண்டிலி கண்டு
கொழுநற் குரைத்தனள்; கொலைசெய் துருவன்
 
  வழுவிலா அவட்கோ வந்ததிப் பழியெனக் 135
  கழிபடர் உறுவோன், `கரந்துறை வாழ்வு
நாமினி மேற்கொளல் நன்றிலை, அதன்றலை
தூமொழி யுறுபழி துடைப்பது நம்கடன்,
காவலர் நம்மைக் காணா முன்னர்
 
  மேவுதும் அவையகம் விளம்புதும் வாய்மை' 140
  என்பன கூறி இன்றுணை தன்னொடும்
என்படும் படுக! எனுந்துணி வுடனே
முற்பட அவையக முதல்வர்ச் சார்ந்து,
 
     
 

துருவன் நிகழ்ந்தன கூறல்

 
     
  விளிவுறுங் கோமகன் நளியிருட் புக்கதூஉம்;  
  ஒளிவுடன் செலலால் ஐயம் உற்றதூஉம், 145
  அறியா வகையில் அவற்பின் தொடர்ந்ததூஉம்,
உரியவள் சண்டிலி உறைவிடம் அவன்புக்
 

---------------------------------------------------------------

  உயிர் - உயிரெழுத்து, உக்குறள் - குற்றியலுகரம், கோல் - தராசு.