|
| கழல்மிகு காம மொழிபல புகன்றதூஉம், தழலெனக் கொதித்துத் தான்சினங் கொண்டதூஉம், | |
| கைதவன் அவனெனக் கருதித் தொலைத்ததூஉம், | 150 |
| மெய்ம்மை தெரிந்து விரைந்தவண் பெயர்ந்ததூஉம், கொலைநிகழ் பொழுதத்துக் குலக்கொடி இலாததூஉம் கலைமகள் அவட்கொரு களங்கம் இலாததூஉம், அஞ்சா தனைத்தும் எஞ்சா துரைத்து | |
| நெஞ்சால் மகிழ்வோன் நேரிழை பூங்கொடி | 155 |
| விடுதலை வேட்டனன்; வியன்பே ரவையத்து நடுநிலை பிறழா நடுவர் மகிழ்ந்து, | |
| | |
| பூங்கொடி விடுதலை | |
| | |
| `முடிநிலை அறியா முதிர்ந்தெழும் உணர்ச்சியிற் படுகொலை புரியினும் பாவை யிவட்குக் | |
| கெடுதலை விழையான் முடிவினைப் போற்றுவென்; | 160 |
| இடுபழி ஏற்றவள் விடுதலை அடைகுவள்' என்னலுந் துணையொடும் இளையோன் களித்தனன்; நென்னல் மூடிய நெடுஞ்சிறைக் கதவம் இன்னே திறந்தது; மின்னே ரிடையாள் | |
| பொன்னே அனையாள் பூங்கொடி மீண்டனள்; | 165 |
| நன்னர் வினையே நாடிப் புரிவோர்க் கின்னல் வரினோர் இமைப்பினில் இரியும் என்னும் உண்மை இசைத்தது போல | |
| ஒலியிட் டாங்கண் ஒய்ந்ததக் கதவே. | 169 |
--------------------------------------------------------------- |
| நென்னல் - நேற்று, நன்னர் - நல்ல, இரியும் - நீங்கும்.. | |
| | |