25. கிழார்திறம் அறிந்த காதை | |
|
| நிலக்கிழார் பூங்கொடியை வேண்டல் | |
| | |
| பழியும் சிறையும் நீங்கிய பாவையை வழியெதிர் நின்று வரவுரை கூறிக் கழிபே ருவகைக் களிப்பொடு நிலக்கிழார் தம்முயர் மாமனைக் கம்மகள் தன்னையும் | |
| உடன்கொண் டேகி `என்றுமென் னகத்தில் | 5 |
| இடனுண் டாதலின் ஈண்டுநீ உறைக!' என்னுங் கனிமொழிக் கியைந்தன ளாகி மின்னும் பிறைநிகர் நன்னுதல் அரிவை, | |
| | |
| பூங்கொடி நன்றிமொழி | |
| | |
| `ஐயநின் னன்புக்கு யாதுகைம் மாறு | |
| செய்வதென் றறியேன், திகைப்புறு கின்றேன்; | 10 |
| முனம்நினை யறியேன் எனினும் உன்பால் இனம்அறி யாவணம் எழுந்ததோ ரன்பு தழைத்ததென் னுளத்தே; தந்தையின் உறவை விளைத்ததித் தொடர்பு வீய்ந்தஎன் றந்தை | |
| இல்லாக் குறையை இல்லா தொழித்தனை; | 15 |
| நில்லாப் பழியால் நெடுஞ்சிறை புக்குப் பொல்லாத் துயராற் பொன்றுங் காலை நடுக்குற்ற நின்மனம் நன்குயான் அறிகுவல்; இடுக்கண் களைய எடுத்தநன் முயற்சியும் | |
| தெற்றென உணர்குவென்; சிறுமகள் எனக்குநீ | 20 |
| உற்றுழி உதவிய ஒருபெருங் கருணைக்கு நாளும் நாளும் நன்றியறி வுடையேன்; வாழும் பொழுதெலாம் வணங்குத லன்றி ஏழை யாதுநான் இயம்புவல் ஐய!' | |
--------------------------------------------------------------- |
| பொன்றுங்காலை - அழியும்போது, தெற்றென - தெளிவாக. | |
| | |