பக்கம் எண் :

பக்கம் :190பூங்கொடி

 

கிழார் முகமன் வேண்டா எனல்

 
 
  எனுமொழி கேட்ட கனிமொழிக் கிழவர் 25
  `நனிமிக நல்லாய்! நானிலத் தின்றுதான்
பெற்றோர் தமக்குப் பெறுமகள் நன்றி
சொற்றது கேட்டேன்; மற்றவர் போல
மதித்தனை கொல்லோ? உற்றவர் என்று
 
  குறித்தனை யாயின் விடுத்திடு முகமன்' 30
  எனுமொழி கூறி இனிதிருந் தனரால்;  
     
 

அருண்மொழி அடிகளொடு வருதல்

 
     
  குலக்கொடி கோமகன் கொலைகுறித் தாளெனச்
சிறைப்பட லாயினள் எனுங்கொடுஞ் செய்தி
நாளிதழ் காட்ட நடுநடுக் குற்று
 
  வாளிற் போழ்ந்தென மனத்துய ரெய்திய 35
  அன்னை யாகிய அருண்மொழி ஆங்கண்
`என்னிளங் கொடிக்கோ இப்பழி நேர்ந்தது!
வன்பழி சூட்டிய வன்கணர் எவரோ?
தாய்மொழி காக்கும் வாய்மை மாந்தர்
 
  வீய்துயர் எய்தி வீண்பழிக் காட்படல் 40
  விரிநீர் உலகத்து விதியோ' என்று
சொரிநீர் விழியர் துயருறும் மொழியர்
பெரியோ ராகிய பீடுயர் அடிகள்
தாந்துணை யாகத் தடமனை சூழ்தரு
 
  வேங்கை நகரினை விரைந்தெய் தினளே; 45
     
 

விடுதலைப் பேறறிந்து மகிழ்தல்

 
     
  வீங்கிய துன்பினர் ஆங்கண் வினவிப்
பூங்கொடி பழியிலள் பூட்டிய சிறையகம்
திறந்தது, விடுதலை பிறந்தது, பண்பாற்
 

---------------------------------------------------------------

  முகமன் - மதிப்புச்சொற்கள், போழ்ந்து - பிளந்து, வன்கணர் - கொடியவர், துன்பினர் - துன்பத்தினர்.