பக்கம் எண் :

கிழார்திறம் அறிந்த காதைபக்கம் : 191

 
  சிறந்தவர் நிலக்கிழார் பெருந்துணை யாக  
  நன்னுதல் அவர்மனை நண்ணினள் எனச்சிலர் 50
  பன்னுதல் கேட்டுப் பாவையும் அடிகளும்
புயலிற் சிக்கிய மரக்கலம் ஊர்வோர்
வியனலை உந்த விடுகரை சேர்ந்தார்
உள்ளம் போலத் துள்ளிய உவகை
 
  வெள்ளம் பொங்க விம்மும் நெஞ்சினர் 55
  பெருநிலக் கிழவர் உறுமனை குறுகி
மறுவறு பூங்கொடி மதிமுகங் கண்டனர்;
 
     
 

அருண்மொழி வாழ்த்து

 
     
  கலங்கிய கண்ணினள் காலடி வீழ
இளங்கொடி உடலை இருகையால் எடுத்தனள்;
 
  உச்சி மோந்தனள் மெச்சினள் வாழ்த்தினள் 60
  வைத்தகண் வாங்கிலள் `வயிற்றினில் பால்தனை
வார்த்தனை மகளே வார்த்தனை' எனுமொழி
சேர்த்தனள் அருண்மொழி; செம்பொருள் அடிகள்
 
     
 

அடிகளார் வாழ்த்து

 
     
  `பழியெனுங் கருமுகில் பாவையாந் திங்களை  
  வழியினில் மறைத்து, கழிபடர் இருள்எம் 65
  உளத்தினிற் பரந்து வளைத்த தாயினும்
கணத்தினில் முகிலிருள் காற்றிற் பறந்தன;
வாழிய மகளே! வாழிய மகளே!
வளர்தமிழ்ப் பணிக்கு வருமிடர் பலவாம்,
 
  தளர்மனங் கொள்ளேல், தாயே நம்முயிர் 70
  இழப்பினும் இழப்போம் இனியநந் தாய்மொழி
வளர்ப்பதே நங்கடன் வாழிய மகளே!
உயிரும் உடலும் ஒழிவன வாயினும்
செயிரறு நம்பணி செந்தமிழ்க் காகின்
 
  உயரிய புகழொடு ஒண்டமிழ் வாழும், 75

---------------------------------------------------------------

  நன்னுதல் - பூங்கொடி, பாவை - அருண்மொழி.