பக்கம் எண் :

பக்கம் :192பூங்கொடி

 
  வாழிய வாழிய வண்டமிழ்த் தொண்டே!'
எனப்பல கூறி இயன்மொழி வாழ்த்து
மனத்தொடு வாழ்த்தினர் மலையுறை யடிகள்;
 
     
 

நிலக்கிழார்க்கு அறிமுகஞ் செய்தல்

 
     
  அவ்வுழை நிலக்கிழார் அணுகின ராகச்  
  செவ்விய பூங்கொடி சென்னி தாழ்த்தி, 80
  `ஈங்கிவள் என்னை ஈன்றவள் ஆவள்
பாங்குயர் அருண்மொழிப் பெயரினள் ஐய!
தாங்கிய துயரொடு தாயிவள் இருந்துழி
நீங்கிட அத்துயர் நின்றருள் புரிந்தவர்,
 
  குறளகம் என்னும் அருளகங் கண்டவர், 85
  குறள்நெறி திறம்பாக் கொள்கையர் இவராம்,
கலைபல பரவ வழிபல கண்டவர்
மலையுறை யடிகள் எனும்பெயர் மருவும்
வரே எளியனை இத்துறைப் படுத்தினர்,
 
  கவலை தவிர்ந்திட நல்வழி காட்டினர், 90
     
 

கிழாரை அறிமுகப் படுத்துதல்

 
     
  `வருக! வரு'கென வரவுரை கூறி  
  இருகை கூப்பி இன்முகங் காட்டி 95
  `அமர்க அமர்'கென அவ்வுழை அமர்த்தித்
தமரென மகிழத் தாமும் இருந்தனர்;
இருந்திடும் கிழவரை இருவர்க்கும் விளக்கினள்;
`பெருந்தனம் உடையவர், பேணிய பண்பினர்,
 
  விருந்தெதிர் கொள்ளும் விழைவினர், என்பால் 100
  உழுவ லன்பும் உறவென எண்ணிப்  

---------------------------------------------------------------

  சென்னி - தலை, தமர் - தம்மவர், உழுவலன்பு - ஒப்பற்ற அன்பு.