|
| பழகும் பண்பும் கெழுமும் பெரியார், பொழுதெலாம் கலையிற் பொருந்தும் நெஞ்சினர், யாங்கணும் காண்கிலா ஓங்குயர் நூலகம் | |
| ஈங்கொன் றமைத்திட யான்விழைந் தியம்ப, | 105 |
| மாபெரும் மாளிகை மனமுவந் தீந்தனர், சிறையகம் புகுந்துயான் துயருறுங் காலை உறுதுணை யாகி உதவிய நட்பினர், விடுதலை பெற்று வெளிப்படூஉம் என்னை | |
| உடனழைத் திம்மனை உறைக என்றனர். | 110 |
| முனம்மகள் இழந்த முதியவ ராதலின் எனைமக ளென்றே எண்ணிடும் அருளினர், பெருநிலக் கிழாரெனும் பெயரினர் இவ'ரென அனைத்தும் எடுத்துரைத் தாயிழை நின்றுழித் | |
| | |
| நிலக்கிழார் வியப்பும் திகைப்பும் | |
| | |
| திகைத்தவ ணிருக்கும் தெரிவை அருண்மொழி | 115 |
| முகத்தினை முகத்தினை முதியவர் நோக்கி வியப்பும் திகைப்பும் விளங்கா ஐயமும் மனத்தினுள் தோன்ற மயங்கி யிருந்தனர்; | |
| | |
| அடிகளார் வினவுதல் | |
| | |
| இமையா நாட்டத் திருந்திடும் பெரியரை | |
| அமைந்தநன் மனத்தர் அடிகளும் நோக்கி | 120 |
| `அருண்மொழி யாகிய அரிவையின் முகத்தை மருளுறப் பார்த்து மயங்கிய தென்னைகொல்? அகத்துப் பொருதெழும் அளப்பருங் குழப்பம் முகத்தினில் கண்டேன் முற்றவும் உணர | |
| எமக்கவை கூற இயலுமேல் இயம்புக! | 125 |
| மனக்குறை மாறும் மற்றவர்க் குரைப்பின் இனத்தவ ரென்றே எம்மையும் எண்ணுக!' என்றுளங் கனிய இசைத்தன ராகக் | |
| | |