பக்கம் எண் :

பக்கம் :194பூங்கொடி

 
 

கலக்கத்திற்குக் காரணம்

 
     
  கன்றிய மனத்துக் கலையறி கிழவர்  
  `நன்றறி வுடைய நாவல ரேறே! 130
  இன்றுநீர் இருவரும் எழுந்திவண் வரலால்
தொன்று பழகிய தொடர்பும் உறவும்
உடையேன் போல உள்ளங் களித்தேன்;
காரண மில்லாக் கலக்கமும் முளைத்தது;
 
  யாரென அறியா அருண்மொழி யின்முகம் 135
  பாரினில் நிகரிலை எனும்படி வாழ்ந்து
கழிந்தஎன் நாளிற் படர்ந்த நினைவெலாம்
சுழிந்து சுழிந்து தோன்றிடச் செய்தது;
நங்கையின் குளிர்முகம் நாளெலாம் பழகிய
 
  துங்க முகம்போல் தோன்றுதல் கண்டேன் 140
  பூங்கொடி முகமோ பூமியில் நாளும்
ஏங்கிடச் செய்தஎன் இளமகள் முகம்போல்
தேங்கெழில் பொங்கித் திகழ்வதுங் கண்டேன்;
அடங்காக் களிப்பும் அறியாத் திகைப்பும்
 
  விளங்காத் துயரும் உளந்தனிற் கொண்டேன்;' 145
     
 

நிழற்படங்கணடு நிற்றல்

 
     
  என்றிவை கூறி `என்னுடன் வருக'
என்றவர் தனியறை ஒன்றனைத் திறந்து,
கிழாரும் அவர்மனைக் கிழத்தியும் இணைந்த
வண்ணம் பொலியும் கண்கவர் எழிற்படம்
 
  முன்சுவர் தன்னிற் பொலிவது காட்டக் 150
  கண்டஅம் மூவரும் கண்விழித் தயிர்த்தனர்
விண்டிட அறியார் வியர்வியர்த் திருந்தனர்;
மலைத்து நின்றிடும் மலையுறை யடிகள்,
 

---------------------------------------------------------------

  தொன்று - பழமை, மனைக்கிழத்தி - மனைவி, விண்டிட - கூற, மலைத்து - திகைத்து.