பக்கம் எண் :

பக்கம் :196பூங்கொடி

 
  மதித்து வாழ்ந்தேன்; மணந்தவள் காதற்
பரிசில் எனஒரு பச்சிளங் குழவி
தருகையில் என்னைத் தணியாத் துயரில்
 
  உருகிடச் செய்துயிர் ஒடுங்கினள்; யானும் 185
  மறுமணம் புரியா மனத்தினேன் ஈன்ற
சிறுமியின் முகத்துச் சிரிப்பினைக் கண்டு
துயரம் மறந்து துணைவிழி யிமைபோல்
அயர்வொன் றின்றி அவளைப் புரந்தேன்;
 
  கட்டிளம் பருவங் கண்டனள் அவளும் 190
  விட்டுப் பிரிந்தனள்; வேதனைக் கடலுள்
மூழ்கிக் கிடந்தேன்; முதிராப் பூங்கொடி
ஆழ்துயர் துடைத்தனள், அவளென் மகளென
உறுதி எடுத்தேன் உறுதுயர் விடுத்தேன்,
 
  இறுதி விரைவினில் எய்துவ துறுதி 195
  பெறுநிதி அனைத்துமிப் பேதையின் பணிக்கே
தருவதென் றெண்ணி அறுதியும் செய்தேன்;
காதல் மனையின் பெயர்சொல மறந்தேன்
ஏலங் குழலி' என்றவர் செப்புமுன்
 
     
 

அருண்மொழி அரற்றுதல்

 
     
  `ஆ'வென் றலறிய அருண்மொழி மீண்டும் 200
  கூவி யழுதனள்; குறளகத் தலைவர்
அறவுரை கூறி ஆறுதல் தந்தனர்;
செறிதொடி அருண்மொழி செங்கை கூப்பிப்
`பொய்யிலை பொய்யிலை என்மகள் பூங்கொடி
 
  ஐயநின் மகளே! ஐயநின் மகளே! 205
  மெய்யிது மெய்யிது மேலோய்! நன்மகள்
சேரிடஞ் சேர்ந்தனள், சேல்விழி நின்மகள்'
என்பன கூறி இருவிழி பொழிந்தனள்;
 
     
 

அடிகள் வினாதல்

 
     
  முன்புள அடிகள் மென்மொழி விளித்துத்  

---------------------------------------------------------------

  அயர்வு - வருத்தம், புரந்தேன் - காத்தேன், முதிரா - முற்றாத, இறுதி - இறப்பு, அறுதி - முடிவு.