பக்கம் எண் :

பக்கம் :198பூங்கொடி

 
  ஏலங் குழலிக் கிளையாள் மகளே!
ஞாலம் பிழைக்க உழைக்கும் நங்காய்!
உரிமை மகளே! உள்ளந் தழைக்க
வருமென் மகளே வாவென் மகளே!'
 
  இருகை நீட்டி இவ்வணம் மொழிந்தனர்; 240
     
 

பூங்கொடி தொழுது மொழிதல்

 
     
  பொழிகண் ணீரினள் பூங்கொடி மகிழ்ந்து
தொழுதடி வீழ்ந்து `விழுமிய அன்பால்
எனைமக ளெனநீர் ஏற்றனிர் ஐய!
முனம்நம துறவினைக் கனவிலும் அறியோம்;
 
  இயல்பினில் அம்முறை யிருந்திடப் பேற்றோம்; 245
  மயல்தரும் துன்பம் மடிந்தது நம்மிடை;
தந்தை யின்றித் தவிக்குமென் குறையும்
நுந்தம் மகளிலா வெந்துயர்க் கொடுமையும்
இன்றோ டொழிந்தன என்னுயிர்த் தந்தாய்'
 
     
 

நிலக்கிழார் வாழ்த்துதல்

 
     
  என்றாள் கைம்மலர் இறுகப் பற்றித் 250
  தம்மிரு விழியொடு சார்த்திச் சார்த்தி
`இம்மையின் பயனை இன்றே நுகர்ந்தேன்
நம்மையொன் றாக்கிய நற்றமி ழிசையை
வாழ்க வாழ்கென வாழ்த்துவம் வாரீர்!
 
  வாழ்க மகளே! வாழிய தமிழ்!'என 255
  வாழ்த்திய நிலக்கிழார் வண்டமிழ்த் தொண்டராம்
மலையுறை யடிகள் மலர்முகம் நோக்கித்
தலைதனைத் தாழ்த்தித் தகவுடன் வணங்கினர்;
 
     
 

அடிகளார் வாயுறை வாழ்த்து

 
     
  `பெரியீர் வாழ்க! பேதைநும் மகளென  
  உரியீர் வாழ்க! உறவும் ஓங்குக! 260
  புதியநும் உறவு பொதுப்பணி புரியும்  

---------------------------------------------------------------

  இளையாள் - தங்கை, மலர்முகம் - மலர்ந்தமுகம்.