|
| சிறியவட் குறுதுணை செய்தல் வேண்டும்; இளங்கொடி! நினக்கொன் றியம்புதல் கடனாம், வளங்கொளும் இவரொடு வாய்த்தஇத் தொடர்பால் | |
| மகிழ்ச்சியில் மைந்துறும் மங்கைநின் பணியில் | 265 |
| இகழ்ச்சி கொள்ளா திலங்குதல் வேண்டும்; நம்மனோர் தந்தையும் தாயும் தமிழே, அம்மொழிப் பணியே ஆற்றுதல் வேண்டும் செம்மனக் கொடியே சீருடன் வாழிய!' | |
| எனவாங்கு | 270 |
| வாயுறை வாழ்த்து வழங்கினர் அடிகள்; | |
| | |
| இருவரும் உறுதி கூறுதல் | |
| | |
| தந்தையும் மகளும் தாழ்ந்து பணிந்து `முந்தை முறையில் முரண்பா டில்லை, மொழிப்பணி புரிய முட்டொன் றில்லை | |
| விழிப்பொடு பணியில் நடப்பது திண்ணம், | 275 |
| உளத்தெழும் உறுதி இசைத்தனம்' என்றனர்; | |
| | |
| அனைவரும் மணிநகர் மீளுதல் | |
| | |
| அடிகளும் அருண்மொழி அன்னையும் மகிழ்ந்து கொடியிடை மகளை யிருவிழி குளிர நோக்கி வாழ்த்துரை நுவன்றனர்; அன்பு | |
| தேக்கிய நிலக்கிழார் சின்னாள் உறைந்திட | 280 |
| வேண்டின ராக வியநகர்த் தங்கிக் காண்பன கண்டு களிப்புடன் நால்வரும் சேண்படு மணிநகர் சேர்தல் வேண்டிப் | |
| பகலிற் போந்தனர் பயணங் குறித்தே. | 284 |
| | |
| | |