பக்கம் எண் :

பக்கம் :200

26. யாழ்நூல் பெற்ற காதை

வைகறைப் பொழுது

 

 

புலர்பொழு தத்து மலர்முகம் தோய்ந்து
வருமிள மென்கால் வரவுரை கூறக்
குறுமுகை தாங்கும் கொடியினம் பலவுடன்
சிறுநகை காட்டிச் செடியசைந் தாடத்
 
  தளிர்பசும் புற்றலை தண்சிதர் உறைப்ப 5
  நளிமலர் தோறும் நடம்புரி சுரும்பினம்
பலபல தொக்குப் பண்ணொலி மிழற்றப்
பலர்தொழ வரூஉம் பரிதியஞ் செல்வன்
விரிகதிர் நீட்டி விண்வெளி விளக்கச்
 
     
 

கோட்டை நகரில் தங்குதல்

 
     
  செறிதொடி அருண்மொழி சுரிகுழற் பூங்கொடி 10
  தொடர்ந்துடன் பின்வரத் தொழுதகும் அடிகளும்
படர்ந்தெழும் அன்பால் பழுநிய கிழாஅரும்
கோட்டை நகரினைக் கூடின ராகிக்
கோட்டமில் மனத்தர் கோனூர் வள்ளல்
 
  வீட்டினில் விருந்தாய் வேட்டுடன் புக்கனர்; 15
     
 

கோனூர் வள்ளலொடு கலந்துரையாடல்

 
     
  புக்கவர் தம்மைப் பொலிமுகங் காட்டித்
தக்க இன்னுரை தந்துளம் மலர்ந்து
மிக்க மகிழ்வால் மேம்படு வள்ளல்
வருக வருகென வரவுரை கூறி
 

---------------------------------------------------------------

  மென்கால் - தென்றல், குறுமுகை - சிறுமொட்டு, சிதர் - துளிகள், உறைப்ப - சிதற, கரும்பினம் - வண்டுக்கூட்டம், தொக்கு - கூடி, மிழற்ற - இசைக்க, சுரிகுழல் - சுருள் கூந்தல், கிழாஅரும் - பெருநிலக்கிழாரும், கோட்டமில் - வங்சனை இல்லாத, வேட்டு - விரும்பி.