| இருகை கூப்பி இருக்கை யளித்தனர்; | 20 |
| பெருநிலக் கிழவரின் பெட்புறும் நண்பர் இருநிதிக் கோமான் ஈகை மனத்தினர் புலவர்க் குதவும் புரவலர், கரவிலர் குலனருள் சிறந்த கோனூர் வள்ளல் | |
| நாட்படு நண்பரை நலமெலாம் வினவி, | 25 |
| மீப்படும் அடிகள் வியனுல குய்ய ஏற்றுள பணியும், இளங்கொடி யாகிய பூங்கொடி மங்கை பூண்டுள பணியும் தெள்ளிதின் நிலக்கிழார் தெரிப்பக் கேட்டுக் | |
| கள்ளவிழ் கோதையின் உள்ளத் துறுதியை | 30 |
| நயந்தும் வியந்தும் நன்கனம் புகழ்ந்தும் பயன்மிகு தொண்டினைப் பலபட வாழ்த்தி வருவிருந் தோம்பி வளமனை யிருந்துழி, | |
| | |
| மயில்வாகனர்க்கு அறிமுகஞ் செய்தல் | |
| | |
| ஒருமனப் பாடும் ஓம்பிய நெறியும் | |
| விரிமொழிப் புலமும் ஒருங்குடன் பெற்றார், | 35 |
| உரனெனுந் தோட்டியால் ஓரைந் தடக்கி இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார், குணமெனுங் குன்றின் கொடுமுடி நின்று செயற்கருஞ் செயல்பல செய்திடும் பெரியார், | |
| கற்றவர் குழுமும் கடல்சூழ் ஈழம் | 40 |
| பெற்றவர், மொழிபல கற்றவ், நற்றவர், எழில்மயில் வாகனர் எனும்பெயர் பெற்றவர் பொழிலிடைத் திகழும் வளமனை உற்றனர்; | |
--------------------------------------------------------------- |
| புரவலர் - காப்பாளர், கரவிலர் - வஞ்சனை இல்லாதவர், நாட்படு - பல நாள் பழகிய, மீப்படும் - புகழ்மிகும், தெள்ளிதின் - தெளிவாக, ஓம்பிய - காத்த,உரன் - அறிவு, தோட்டி - அங்குசம், ஓரைந்து - ஐம்புலன்கள், இருமை - நன்மை தீமை, அறம்பூண்டார் - துறவு மேற்கொண்டார், கொடுமுடி - உச்சி. | |
| | |