பக்கம் எண் :

பக்கம் :202பூங்கொடி

  வளமன வருமயில் வாகனர்க் காணலும்  
  உளமுறு மகிழ்வால் உடனெழுந் தோடி 45
  நல்வர வேற்ற நலங்கிளர் வள்ளல்
அவணிருந் தோர்தம அறிமுகஞ் செய்தனர்;
அவர்தமக் கிவர அறிமுகஞ் செய்தனர்;
தாயும் அடிகளும் தயல்பூங் கொடியும்
 
  தோயும் மகிழ்வால் தொழுதனர் ஆங்கண்; 50
     
 

மயில்வாகனர் வாழ்த்துரை

 
     
  `பூங்கொடி ஏற்றுள பொதுப்பணி நாட்டில்
ஓங்குயர் நலந்தரும் உயர்வுறும் நம்மொழி'
எனமயில் வாகனர் ஏற்றம் உரைத்து
மனமுறும் உணர்வால் வாழ்த்துரை கூறி,
 
  `இளங்கொடி யாகிய நலங்கிளர் பூங்கொடி! 55
  விளங்குநின் பணிக்கு வியன்துணை யாக
யாழ்நூல் என்னும் இந்நூல் பெறுக!
 
     
 

யாழ்நூலின் சிறப்பு

 
     
  ஏழிரண் டாண்டுகள் இடர்பல துய்த்தும்
ஏழிசை யாழின் இயற்றிறம் யாவும்
 
  நுண்ணிதின் ஆய்ந்து நுவல்வதிப் பெருநூல்; 60
  நண்ணுமிம் முயற்சியில் நான்படு துயரம்
எண்ணினும் உடலுளம் எல்லாம் நடுக்குறுஉம்
ஆயிரம் ஆண்டுகள் அறியா வகையில்
வீயுறும் நிலையில் வீழ்ந்து கிடந்த
 
  நற்றமிழ் யாழும் சொற்றமிழ் இசையும் 65
  தெற்றென விளக்குந் திருவிளக் கிந்நூல்
செந்தமிழ்க் கிஃதோர் சீர்சால் பொற்பணி
இந்தநன் னினைவால் இடரெலாம் மறந்தேன்;
 

---------------------------------------------------------------

  நற்றவர் - நல்லதவத்தினர், அடிகள் - மலையுறை அடிகள், ஏற்றம் - பெருமை, வியன் - பெரிய, நடுக்குறூஉம் - நடுங்கும், பொற்பணி - அழகிய பணி.