| நற்றவ முடையேன் யானும்' என்றனள்; இவ்வுரை செவிமடுத் திருந்திடும் வள்ளல் | |
| செவ்விய மனத்தீர்! சிறியஎன் பணியால் | 95 |
| எற்புகழ்ந் தேத்தல் இருவீர் தமக்கும் பொற்புடைத் தன்று; புகழுரை தவிர்க! செந்தமி ழன்னையின் சீர்சால் தவமகற் கிந்தநற் கடன்செய இயைந்ததென் பேறாம்; | |
| யார்க்கது வாய்க்கும்? எற்கது வாய்த்தது! | 100 |
| பார்க்குள் என்போற் பயன்பெற் றவரார்? பெறலரும் பேறு பெற்றேன் போலப் பெருமகிழ் வுறுமெனைப் பேணிநீர் புகழ்ந்தீர்!' | |
| | |
| இருவர்க்கும் கடன் | |
| | |
| எனஇவை இசைக்க, இளமென் பூங்கொடி | |
| `நுங்கடன் அஃதெனின் எங்கடன் இஃதாம்' | 105 |
| எனும் மாற்றம் இறுத்தன ளாக அனைவரும் களிப்பால் ஆர்த்து மகிழ்ந்தனர்; | |
| | |
| யாழ்நூல் விளக்க வேண்டுதல் | |
| | |
| பனிமலர்க் கூந்தல் பைந்தொடி அரிவை முனிவர் தம்பால் மொழிந்திவை வேண்டினள் | |
| `வாழ்நாள் அனைத்தும் வளரறங் காப்போய்! | 110 |
| யாழ்நூல் முழுதும் நவையற உணரும் ஆற்றல் உடையேன் அல்லேன் ஆதலின் போற்றி அதன்றிறம் புகலுதி பெரும!' என்பன கூறி இருந்தனள் ஆங்கண்; | |
| | |
யாழ்நூல் விளக்குதல் - யாழ்வகை, யாழுறுப்பு |
| | |
| அன்புளங் கொண்டார் அவள்மொழிக் கிசைந்து | 115 |
| `மன்பதைக் குணர்த்துதல் என்பணி யாகும் மறைந்தஇக் கருவியின் மாண்புகள் யாவும் திறந்தெரிந் துணர்வையேல் தெரிவைநின் பணிக்கே | |
--------------------------------------------------------------- |
| பார்க்குள் - உலகில், இறுத்தனள் - சொல்லினள். | |
| | |