பக்கம் எண் :

யாழ் நூல் பெற்ற காதைபக்கம் : 205

  அரண்செயும் ஆதலின் அறைகுவென்' எனமொழிந்  
  தாயிரம் நரம்பான் அமைந்தநற் பேரியாழ் 120
  தோயுறும் அமுதிசை பாய்வுறும் சீறியாழ்
மீன்போல் வடிவம் மேவிய மகரயாழ்
தேன்போல் நரம்பிசை தெரிக்கும் சகோடயாழ்
முளரியாழ் வில்யாழ் முதலன விளக்கிப்
 
  பழகிய வீணையின் பான்மையும் உரைத்துப் 125
  பண்ணுறும் யாழின் பல்வகை உறுப்பும்
முன்னைய அமைப்பும் முற்றுற உணர்த்தி
இலக்கியச் சான்றுகள் எடுத்தெடுத் திசைத்துக்
குலக்கொடி மாதவி கோவலன் அருகில்
 
  கடற்கரை யமர்ந்து கானல் வரியாம் 130
  மிடற்றிசை கலந்து மெல்விரல் வருடிய
அவ்வியாழ்க் கருவியின் அமைப்பும் இயம்பிக்
கவ்விசை நரம்புக் கருவி முதலாச்
செவ்விய நால்வகைக் கருவியும் செப்பிச்
 
     
 

இசைநூல் இசைத்தல்

 
   
  சிற்றிசை பேரிசை செயிற்றியம் குணநூல் 135
  முற்றிய சயந்தம் முறுவல் எனப்பல
சங்கத் திசைநூல் தனித்தனி சுட்டி,
இங்கச் சுவடிகள் இழந்தவும் கூறி,
 
   
 

பண்முறை விளக்கல்

 
   
  நண்ணும் இசைநூல் நலமெலாம் உணரப்  
  பண்ணும் பண்ணியல் திறமும் பகர்ந்து 140
  கண்புலர் காலை கடும்பகல் மாலை
வெண்மதி இரவாம் வேளையில் இசைக்கும்
பண்ணிவை, பொதுவிற் பாடும் பண்ணிவை,
 

---------------------------------------------------------------

  அரண்செயும் - துணைசெய்யும். தெரிக்கும் - இசைக்கும், முளரி - தாமரை, முற்றுற - முடிவுற. மிடற்றிசை - குரலிசை, நால்வகை - நரம்பு, தோல், துளை, கஞ்சம்.