பக்கம் எண் :

பக்கம் :208பூங்கொடி

 

`பொறுப்புணர் மாந்தர் விருப்புடன் ஏற்கும்
அறப்பணி யிஃதாம் ஆதலின் இசைகுவை!
அலர்தொறும் அலர்தொறும் அஞ்சிறை விரித்துப்
 
  பலமுறை சுழன்று பசுந்தேன் உறிஞ்சி 25
  நலம்நுகர் சுரும்புபோல் நாடொறும் முயன்று
பலமொழி பயின்று பயன்றுய்த் தனையால்;
ஆங்காங் கணுகி அவ்வவர் கலையும்
ஓங்குயர் பண்பும் உணர்ந்தனை யாயின்
 
  புதுமைக் கலைகள் தமிழிற் பூக்கும், 30
  அருமைத் தமிழும் அவ்விடை மலரும்,
உரிமை யனைத்தும் உன்மொழிக் கெய்தும்,
இதற்கொரு மறுப்பும் ஈன்றாள் உரையாள்
எதற்கும் கலங்கேல் இசைந்தெழு மகளே';
 
 

பூங்கொடி இசைந்தெழுதல்

 
  இம்மொழி கேட்ட செம்மனப் பூங்கொடி 35
  `நும்மொழி நடத்தல் நோன்பெனக் கொண்டுளேன்!
நம்மொழி செம்மொழி நலம்பெறல் வேண்டி
இல்லறம் என்னலம் இன்னன துறந்தேன்;
நல்லறம் தமிழ்ப்பணி நாடொறும் இயற்றுங்
 
  குறிக்கோள் வழ்வினைக் கொண்டுளேன் அறிவீர்! 40
  இறப்பினும் இப்பணி இயற்றியே இறப்பேன்,
என்மொழிக் குயர்வெனின் இன்னுயிர் ஈவேன்,
பன்மொழிப் பயிற்சி பைந்தமிழ் வளர்ச்சிக்
கொருதுணை யாகுமென் றுன்னிப் பெற்றெனென்,
 
  விரிநீர் உலகத்து வெளிநா டனைத்தும் 45
  பரிவுடன் ஏகிப் பண்பும் கலையும்
தெரிதர வுணர்ந்து தென்றமிழ்ப் பண்பெலாம்
 

---------------------------------------------------------------

  இசைகுவை - உடன்படுக, அலர் - மலர், அஞ்சிறை - உள்இறகு. ஒருதுணை - ஒப்பற்ற துணை, தெரிதர - தெரியுமாறு.