பக்கம் எண் :

பக்கம் :210பூங்கொடி

 

ஆண்டுள பெரியரும் ஆயிழை வாழ்கென  
  மூண்டெழும் உணர்வினால் மும்முறை வாழ்த்தினர்; 75
 

பூங்கொடியின் அயல்நாட்டுச் செலவு

 
  தமிழ்த்தூ தேகும் சான்றோர் குழுவினுள்
புகழ்த்திரு மகளாம் பூங்கொடி சார்ந்து
பயண மாகிப் பறந்தனள் வானில்,
அயலில் நின்றார் அனைவரும் மீண்டனர்;
 
  வானிற் பறந்தும் மரக்கலம் ஊர்ந்தும் 80
  வேனிற் பருவம் விழுபனிப் பருவம்
நானிலத் தோங்கும் நாடுகள் கடந்து
கடந்தாங் காங்குக் கடமைகள் ஆற்றிப்
படர்வோள் ஆயிடைப் பன்மொழிப் பயிற்சியும்,
 
 

சான்மார் நாட்டில் பூங்கொடி

 
  தமிழ்நூல் மாட்டுத் தணியா வேட்கையும், 85
  நிமிர்மனச் செருக்கால் தமிழ்மொழி பழிப்போர்
இமிழ்கட லுலகில் எவரே யாயினும்
விருப்பும் வெறுப்பும் விடுத்துப் பழிமொழி
மறுத்துரை வழங்கும் பொறுப்புணர் பண்பும்,
 
  உடையவர் இளையவர் உலகறிந் தொழுகும் 90
  நடையவர் சான்மார் எனும்பெயர்க் குரியவர்
பெருந்துணை கொண்டு பெருநாட் டாங்கண்
விருந்தின ளாகி வேண்டிய பொருள்கள்
தெரிந்துளங் கொண்டு தெரிப்பன தெரித்துப்
 
 

கமிலர் நாட்டில் பூங்கொடி

 
  பிறிதொரு நாடு பேணினள் செல்வோள் 95
  அந்நாட் டாங்கண் அருந்திறல் அறிஞர்  

---------------------------------------------------------------

  சான்மார் - ஜான்மார், இங்கிலந்து நாட்டறிஞர்.
தெரிப்பன -விளக்குவன.