| தடையிலை எனுநெறி தையல் கண்டனள், விண்வழிச் சென்று வெண்மதி கண்டு | |
| மண்ணிடை உலவும் மாந்தரும் கண்டனள், | 125 |
| வெண்பனி சூழுமவ் வியன்பெரு நாட்டில் நண்பும் பண்பும் நற்றமிழ்ப் பயிற்சியும் மருவிய தோழர் மாசறு புலவர் உருதின் என்னும் ஒருபெயர் மாற்றிச் | |
| செம்பியன் எனஒரு செந்தமி ழாக்கிய | 130 |
| நம்பியைக் கண்டனள்; நலம்பல செறிந்த அப்பெருந் தேஎத்துச் செப்புந செப்பி நற்பொருள் பற்பல நாடித் தொகுத்துக் | |
| | |
| ஏனைய நாட்டில் பூங்கொடி | |
| | |
| கற்பனைக் கெட்டாக் காலங் கண்ட | |
| நற்றமிழ்ப் பணியே நாளெலாம் புரியும் | 135 |
| பொற்றொடி நங்கை புதுமை வளர்தரும் நாடுகள் சென்றனள் ஏடுகள் தேடினள் பீடுறு தமிழ்ப்புகழ் கூடுதல் உறுதி | |
|
பூங்கொடி மீட்சி |
|
| என்றுளம் மகிழ்ந்தே இருநீர்ப் பரப்பும் | |
| துன்றிய நிலமும் தொலைவிண் வெளியும் | 140 |
| கடந்து மீண்டனள் கலைபயில் செல்வி; இடம்படு மணிநகர் யாண்டும் ஆர்ப்பொலி படர்ந்திட வாழ்த்துரை பாவை ஏற்றனள்; ஆயும் மலையுறை யடிகளும் பிறரும் | |
| தோயும் மகிழ்வால் துள்ளினர் உள்ளம் | 145 |
| நாடுகள் தோறும் நடந்தன விளக்கி | |
--------------------------------------------------------------- |
| தையல் - பூங்கொடி, உருதின் - ரூதின், உருசிய நாட்டறிஞர்; தேஎத்து - தேயத்தில், செப்புந -சொல்பவை, இருநீர்ப்பரப்பு - கடல். | |
| | |