பக்கம் எண் :

அயல்நாடு சென்றுவந்த காதைபக்கம் : 213

 

புதுநூல் படைத்தல்

 
     
  ஏடுகள் கொணர்ந்தன எவைஅவை துலக்கிப்
பொருளில் நூலும் புதுப்புதுப் படைப்பும்
அறிவியல் நூலும் அருங்கவித் திரட்டும்
 
  உளநூல் நிலநூல் உண்மைத் தத்துவம் 150
  பலவர லாறும் படைத்தனள் தமிழில்
கலையெலாம் தமிழில் இலையெனுங் குறையினி
இலையெனச் செய்தனள் எம்முயர் தலைவி;
மூச்சும் பேச்சும் முத்தமிழ்க் காக்கி
 
  ஏச்சும் பேச்சும் இடரும் துச்சம் 155
  எனஅவை ஒதுக்கி மனமொழி செயலால்
அனைமொழி தமிழுக் கருஞ்செயல் ஆற்ற
 
  வல்லவள் அவளே வாழிய மகளே. 158

---------------------------------------------------------------

  துலக்கி - விளக்கி, அனைமொழி - அன்னைமொழி.