28. சொற்போர் நிகழ்த்திய காதை |
பல்வகை எதிப்பு |
|
| பூங்கொடி யின்புகழ் யாங்கணும் ஒங்கிடத் தாங்குதல் ஆற்றாத் தரியலர் புழுங்கி ஏங்கிய மனத்தொடு எவ்வழி யாயினும் ஆங்கவள் வளர்புகழ் அழிப்பான் வேண்டித் | |
| தீங்குகள் பலவும் செய்திடுங் குழுவும், | 5 |
| தொலைவில் மறைந்து தூண்டுவோர் தூண்ட அலையும் மனத்தினர் ஆடும் பாவைகள் நிலையிலாக் கொள்கை கலையெனப் பூண்டோர் மலையும் நோக்கினர் மதியிலார் குழுவும், | |
| உண்மை நன்மை ஒன்றும் அறிகிலார் | 10 |
| எண்ணும் ஆற்றல் எதுவும் அறிகிலார் மனத்தால் தீமை மதித்தலும் அறிகிலார் இனத்தால் நல்லவர் எனினும் அறிவெனும் சுடரறி யாமல் சூழிருள் மூழ்கி | |
| மடமுறும் மனத்தினர் வஞ்சமில் குழுவும், | 15 |
| மெய்ம்மை யுணர மேவுவார் குழுவும், தெய்வப் பணியால் உய்யும் குழுவும் கொடுத்திடும் துயரெலாம் குலக்கொடி உதறினள்; தொடுத்திடும் கணையென அடுத்தடுத் திருந்து | |
| விடுத்தனர் வினாக்கள் வெருவிலள் பூங்கொடி; | 20 |
|
பிறமொழி வெறுப்பென்பார்க்குப் பூங்கொடி மறுப்பு |
|
| `பிறமொழி வெறுத்தல் பேதைமை யாகும் அறமன முடையோர் அவ்வணம் செய்யார் | |
--------------------------------------------------------------- |
| தரியலர் - பகைவர், அழிப்பான் - அழிக்க, பாவைகள் - பொம்மைகள், மலையும் - தகராறுசெய்யும், உய்யும் - பிழைக்கும். | |
| | |