பக்கம் எண் :

சொற்போர் நிகழ்த்திய காதைபக்கம் : 215

 

குறுமன மிஃதாம் விரிமனம் வேண்டும்
யாதும் ஊரென ஓதிய நாமோ
 
  தீதெனப் பிறமொழி செப்பித் திரிவது? 25
  மோதும் பகைமை முகிழ்ப்பது நன்றோ?'
நல்லுரை இவ்வணம் நவில்வது போலச்
சில்லுரை சிலர்சிலர் செப்பித் திரிந்தனர்;
மறுப்புரை அவர்க்குக் கொடுத்திடும் பொறுப்பினள்
 
  விரித்துரை வழங்கி விளக்கினள் இவைஇவை; 30
  `அகத்தும் பிறமொழி வெறுத்திடல் அறிகிலம்
பகுத்தறி வுடையோம் பண்பும் உடையோம்
வேண்டும் மொழிகளை வேண்டுவோர் பயின்றிங்
கீண்டி யுறையுநர் எண்ணிலர் அறிக!
 
     

குறுமனம் அன்று

     
  குறுமன மென்றும் விரிமன மென்றும் 35
  சிறுமன முடையோர் செப்புவ கொள்ளேல்!
தனியொரு மாந்தன் தன்னலம் பேணின்
முனியத் தகுமது குறுமன மாகும்;
தன்னல மறுப்பது விரிமன மாகும்,
 
  முன்னவர் பேணிய மொழியும் நாடும் 40
  மன்பதை முழுமைக் குரியன வன்றோ!
அன்புளங் கொண்டோர் அவற்றைப் பேணின்
தென்படும் குறைஎன்? தெளியா மாந்தர்
குறுகிய மனமெனக் குளறுவர் நம்பேல்!
 
 

சான்றோர் நெறியே

 

 

பெறுபுகழ்த் தாய்மொழி பேணாஅ ராகி 45
  வருமொழி வாழ்த்தி வரவுரை கூறுநர்
அறமன முடையரென் றறிவுளோர் பகரார்;
 

---------------------------------------------------------------

  விரிமனம் - பரந்தமனம், முகிழ்ப்பது - உண்டாவது, உறையுநர் - வாழ்பவர், எண்ணிலர் - கணக்கிலாதவர், செப்புவ - சொல்பவை, மாந்தன் - மனிதன், முனிய - வெறுக்க, பேணார் - பேணாதவர்.